• India
```

கிர் மாடு வளர்ப்பு – குறைந்த முதலீட்டில் மாதம் 2 லட்சம் வருமானம்!!

Gyr Cattle Business In Tamil

By Dhiviyaraj

Published on:  2025-01-23 22:18:16  |    48

இந்தியாவில் வளர்க்கப்படும் மாட்டு இனங்களில் கிர் மாடு ஒரு முக்கியமான நாட்டு மாட்டு வகை ஆகும்.

இந்தியாவில் வளர்க்கப்படும் மாட்டு இனங்களில் கிர் மாடு ஒரு முக்கியமான நாட்டு மாட்டு வகை ஆகும். இது உடல் அளவில் பெரியதுடன், மனிதர்களுடன் எளிதில் பழகக்கூடியது. குறிப்பாக, குஜராத் மாநிலத்தில் அதிகளவில் காணப்படும் இந்த மாடு, உயர்தர பால் தர திறன் கொண்டது.

வளர்ப்பில் அதிக வருமானம்!

குமரி மாவட்டத்தைச் சேர்ந்த கோலப்ப பிள்ளை, கிர் மாடுகளை வளர்த்து சிறப்பான வருவாய் ஈட்டுகிறார். அவரின் அனுபவத்தின்படி, மூன்று மாடுகளை வளர்த்தால் மாதம் ₹50,000 வருமானம் பெறலாம்.

மேலும், ஒரு மாட்டின் மூலம் தினசரி ₹500 வரை ஈட்டலாம். அதுமட்டுமின்றி பால் மட்டுமல்ல, மாடுச் சாணத்திலிருந்து இயற்கை எரிவாயு, ஊதுபத்தி, திருநீறு, கிருமி நாசினி போன்ற தயாரிப்புகள் மூலமும் லாபம் பெறலாம்  தெரிவித்தார். 

தற்போது 50 பசு மாடுகளை பராமரித்து வருவதாகவும், அதன் மூலம் மாதம் 2 லட்சம் ரூபாய் வரை லாபம் கிடைக்கிறது என்றும் கூறியுள்ளார்.