• India
```

நவம்பர் மாதத்தில் மட்டும்...ஒட்டு மொத்த தேசத்தில்...ரூ 1.82 இலட்சம் கோடி GST வசூல்...!

GST Collection In India November 2024

By Ramesh

Published on:  2024-12-02 22:28:55  |    117

GST Collection In India November 2024 - கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் ஒட்டு மொத்த தேசத்தில் ரூபாய் 1.82 இலட்சம் கோடி GST ஆனது வசூல் ஆகி இருப்பதாக தகவல்.

GST Collection In India November 2024 - GSTஎன்பது உற்பத்தி பொருள்கள், விற்பனை பொருள்களின் மீது மத்திய, மாநில அரசுகள் தனித்தனியாக விதிக்கப்படும் வரி என்பது ஒற்றை வரியாக மாற்றப்பட்டு விதிக்கப்படும் ஒரு வரி ஆகும்,இது பொருள்களின் மீது 0%, 5%, 12%, 18%, 28% ஆகும். விலை மதிப்பற்ற கற்கள் மீது 0.25% சிறப்பு விகிதமும், தங்கத்தின் மீது 3% என்ற விகிதத்திலும் இந்தியா முழுக்க விதிக்கப்படுகின்றன.

வருடாந்திர வணிகத்தின் அளவு 40 இலட்சத்திற்குள் இருக்குமானால் GST அவசியம் இல்லை, 40 இலட்சத்தை தாண்டும் பட்சத்தில் GST நிச்சயம் அவசியம், ஒரு சில மாநிலங்களில் வணிகத்தின் அளவு 20 இலட்சங்களாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. நீங்கள் உங்கள் உற்பத்தி பொருள்களை ஈ கமெர்ஸ் மூலம் சந்தைப்படுத்தி விற்க நினைக்கிறீர்கள் என்றால் GST நிச்சயம் அவசியம்.



ஒவ்வொரு மாதமும் ஒட்டு மொத்த GST வசூலை அரசின் நிதி அமைச்சகம் வெளியிட்டு வருகிறது, அந்த வகையில் தேசத்தின் ஒட்டு மொத்த நவம்பர் மாத GST வசூல் ரூபாய் 1.82 இலட்சம் கோடியாக இருப்பதாக தகவல், கடந்த அக்டோபர் மாதத்தின் GST வசூல் ரூபாய் 1.68 இலட்சம் கோடியாக இருந்த நிலையில், நவம்பர் மாதத்தில் வரி வசூல் 8.5% உயர்ந்து ரூ 1.82 இலட்சம் கோடியாக இருக்கிறது.

பண்டிகை கால விற்பனை அமோகமாக இருந்ததால் நவம்பர் மாத GST என்பது 8.5% அதிகரித்து இருக்கிறது, இன்னும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகைகள் அடுத்தடுத்து வர இருப்பதால் டிசம்பர் மாத GST வசூல் 2 இலட்சம் கோடியை நெருங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது, தமிழகத்தின் GST வசூல் 11,096 கோடியாக இருப்பதாக தகவல், அதிகபட்சமாக மஹாராஸ்டிராவில் ரூ 29,948 கோடி GST வரி வசூல் ஆகி இருக்கிறதாம்.