GST Collection Decemeber 2024 - GST என்பது சரக்கு மற்றும் சேவை வரி என அறியப்படுகிறது, இது ஒரு மறைமுக வரி, பொருள்கள் மற்றும் சேவைகளின் மீது மத்திய அரசு மற்றும் மாநில அரசு விதிக்கும் வரிகள் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே வரியாக மாற்றப்பட்டது தான் GST, இந்த வரியானது 0%, 5%, 12%, 18% மற்றும் 28% ஆகிய விகிதங்களில் பொருள்களுக்கும், சேவைகளுக்கும் இந்தியா முழுக்க விதிக்கப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த டிசம்பரில் இந்தியா முழுக்கவுமான GST வசூல் குறித்த தகவல் ஒன்றை மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டு இருக்கிறது, அதாவது கடந்த டிசம்பரில் மட்டும் இந்தியாவில் வசூலான GST வசூல் ஆனது 1.77 இலட்சம் கோடியாக இருப்பதாக தகவல், தொடர்ச்சியாக 10 மாதங்கலாக GST வசூல் ஆனது 1.70 இலட்சம் கோடிக்கும் அதிகமாக வசூல் ஆகி வருவதாகவும் தகவல்.
இந்த ஒட்டு மொத்த வரி வசூலில் CGST யின் பங்களிப்பு, 32,836 கோடியாகவும், SGST யின் பங்களிப்பு 40,499 கோடியாகவும், IGST யின் பங்களிப்பு 47,783 கோடியாகவும், CESS பங்களிப்பு 11,471 கோடியாகவும் இருப்பதாக தெரிகிறது, கடந்த 2023 டிசம்பரில் GST வசூல் 1.65 கோடியாக இருந்த நிலையில் நிதி ஆண்டு 2024 டிசம்பரில் GST வசூல் 7.30% ஏற்றம் கண்டு இருக்கிறது.
ஆனாலும் நவம்பர் 2024 யை ஒப்பிடும் போது டிசம்பரில் GST வசூல் சற்றே சரிந்து இருக்கிறது, கடந்த நவம்பர் 2024 யில் GST வசூல் ஆனது 1.82 கோடியாக இருந்தது, கிறிஸ்துமஸ், புத்தாண்டு போன்ற பண்டிகைகள் இருந்த போதும் கூட நவம்பரை டிசம்பர் வசூல் மிஞ்சவில்லை, கடந்த ஆண்டில் அதிகபட்சமாக ஏப்ரலில் 2.10 இலட்சம் கோடி GST வசூல் ஆகி இருந்தது குறிப்பிடத்தக்கது.