F-11 Fighter Shot Itself - ஒரு இராணுவ விமானம் தன்னை தானே சுட்டுக் கொண்டு வீழ்ந்து போன கதை குறித்து இந்த தொகுப்பில் முழுமையாக பார்க்கலாம்.
அமெரிக்க கப்பல் படையில் Grumman F-11 Tiger என்றதொரு இராணுவ விமானம் செயல்பட்டு வந்தது, இது கிட்டத்தட்ட ஒரு சூப்பர்சோனிக் மாடல், ஒரு மணி நேரத்தில் 843 மைல்களை இதன் வேகம் கடந்து விடும், இப்படியான விமானங்களை அப்போதே அமெரிக்கா கையாள்வதில் சிறந்ததாக விளங்கி வந்தது, பல வித போர்களிலும் இவ்விமானங்களை அமெரிக்கா பயன்படுத்தி வந்தது.
அப்போது 1956 காலம், பயிற்சி விமானி ஆன டாம் அட்ரிஜ் என்பவர் Grumman F-11 விமானத்தை இயக்கினார், நியூஜெர்சி கடற்கரைக்கு 20 மைல் அப்பால் நடைபெற்ற இந்த பயிற்சியில் 4 நொடியில் 70 முறை பயரிங் நிகழ்த்திய டாம் அட்ரிஜ் எல்லாமே சரியாக தான் கையாண்டார், ஆனால் அவர் செய்த ஒரே தவறு குண்டின் திசையிலேயே விமானத்தை இயக்கியது தான்.
இது ஒரு சூப்பர் சோனிக் இராணுவ விமானம் என்பதால் குண்டு பாய்வதற்கு முன் விமானம் பாய்ந்த காரணத்தால், இவர் சுட்ட குண்டுகளே இவரது விமானத்தை துளைத்து வெடித்து சிதற வைத்தன, அதாவது குண்டின் வேகத்தை விட விமானம் வேகமாக பயணித்த காரணத்தால், இவர் சுட்ட குண்டுகளே இவரது விமானத்தை வானில் தூள் தூளாக்கின.
இன்றும் இந்த சம்பவம் ஒரு அரிதான நிகழ்வாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது, ஆனால் தற்போது இருக்கும் இராணுவ விமானங்களில் இந்த குறைபாடுகள் ஏதும் இல்லை, அப்போதையா டாம் அட்ரிஜ் மீதும் எந்த தவறும் இல்லை, இந்த விபத்தில் அட்ரிஜ் கால்முறிவு மற்றும் முதுகு தண்டுவட முறிவுடன் உயிர் தப்பினார் என்பது கூடுதல் தகவல்.