Government Ends No Detention Policy - ஒரு காலக்கட்டத்தில் கல்வியில் பின் தங்கிய மாணவர்கள் இடையில் ஏதாவது ஒரு வகுப்பில் பெயில் ஆகும் போது, அத்தோடு படிப்பை நிறுத்தி விட்டு பள்ளியை விட்டு வெளியேறுவது வாடிக்கையாகி வந்தது, அவ்வாறாக படிப்பை விட்டு வெளியேறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வந்ததால், அரசு சார்பில் 1 முதல் 8 வரை ஆல் பாஸ் என்ற திட்டம் கொண்டு வரப்பட்டது.
இத்திட்டம் கொண்டு வரப்பட்ட பின்பு கல்வியை பாதியிலேயே விட்டு வெளியேறும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது, ஆனால் தற்போது 5 மற்றும் 8 ஆம் வகுப்புக்கான ஆல் பாஸ் திட்டம் நீக்கப்படுவதாக மத்திய அரசு கூறி இருக்கிறது, இனிமேல் 5 ஆம் வகுப்பு, 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இறுதி தேர்வில் பாஸ் ஆகினால் மட்டுமே பாஸ் என கருத்தில் கொள்ளப்படுமாம்.
அதே சமயத்தில் அவர்கள் பெயில் ஆகும் பட்சத்தில் 2 மாதத்தில் மற்றுமொரு வாய்ப்பு அளிக்கப்படுமாம், அதிலும் பெயில் ஆகி விட்டால் மீண்டும் அந்த வகுப்பை படிக்க வேண்டிய நிலை வரும் என மத்திய அரசு அறிவித்து இருக்கிறது, இந்த புதிய விதி கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா மற்றும் சைனிக் பள்ளிகள் உட்பட 3,000 க்கும் மேற்பட்ட மத்திய அரசு நடத்தும் பள்ளிகளுக்கு மட்டும் பொருந்தும்.
மாநிலக்கல்விகள் மூலம் பயிலும் மாணவர்களுக்கும் பள்ளிகளுக்கும் இந்த விதி என்பது கட்டாயமில்லை, அதே சமயத்தில் மாநில அரசுகள் ஒத்துழைக்குமானால், இத்திட்டம் மாநிலக் கல்வி முறைகளுக்கும் கொண்டு வரப்படும் என மத்திய அரசு அறிவித்து இருக்கிறது, மத்திய அரசின் இந்த கல்வி சம்மந்தமான புதிய திட்டத்திற்கு பல்வேறு பக்கங்களில் இருந்தும் எதிர்ப்பு வந்து கொண்டு இருக்கிறது,