• India
```

மூன்று மாதத்தில் ரூ 474 கோடி லாபம் பார்த்த அதானி.. முழு விவரம் இதோ!!

Gautam Adani Company Net Profit

By Dhiviyaraj

Published on:  2025-01-25 13:10:05  |    254

கவுதம் அதானி இந்தியாவின் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவராக இருக்கிறார்.

கவுதம் அதானி இந்தியாவின் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவராக இருக்கிறார். அவர் நிறுவிய அதானி குழுமம், பல்வேறு வணிகத் துறைகளில் செயல்பட்டு, நாட்டின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக வளம்பெற்று வருகிறது. உலகளவில் பணக்காரர்களின் பட்டியலில், அவர் 19-வது இடத்தை பிடித்துள்ளார்.

அதானி குழுமத்தின் ஒரு முக்கிய அங்கமான அதானி கிரீன் எனர்ஜி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் முன்னணி நிறுவனமாக திகழ்கிறது. கடந்த அக்டோபர் முதல் டிசம்பர் வரை, இந்த நிறுவனம் ரூ. 474 கோடி லாபத்தைப் பதிவு செய்துள்ளது, இது முந்தைய ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடுகையில் 85% அதிகமாகும்.

நிகர லாபத்தில் அதிகரிப்பு:

கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில், அதானி கிரீன் எனர்ஜி ரூ. 256 கோடி நிகர லாபத்தைப் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.