TAX Cut In Budget 2025 - பட்ஜெட் 2025 ஆனது பிப்ரவரி 2025 யில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அதன் முக்கிய அம்சமாக 15 இலட்சம் வரை வருமானம் பெறுபவர்களுக்கு வரி குறைப்பு செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது, நிதி அமைச்சர் நிர்மலா சீதா ராமன் அவர்கள் 7 ஆவது முறையாக தாக்கல் செய்யும் இந்த பட்ஜெட் மிடில் கிளாஸ்களின் ப்ரெண்ட்லி பட்ஜெட் ஆக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
சமீபத்தில் பட்ஜெட்க்கு முந்தைய மீட்டிங் டெல்லியில் நடைபெற்ற நிலையில், பட்ஜெட்டின் ஒரு சில அம்சங்கள் மட்டும் தற்போது இணையங்களில் கசிந்து இருக்கின்றன, தற்போதைய சூழலில் வருட வருமானம் 3 இலட்சம் மற்றும் 3 இலட்சத்திற்குள் இருக்கும் பட்சத்தில் அதற்கு வருமான வரி விதிக்கப்படுவதில்லை, 3 இலட்சம் முதல் 7 இலட்சம் வரை இருக்கும் பட்சத்தில் 7% வருமான வரி விதிக்கப்படுகிறது.
7 முதல் 10 இலட்சம் வரையிலான வருடாந்திர வருமானத்திற்கு கிட்டத்தட்ட 10% வரை வருமான வரி விதிக்கப்படுகிறது, 10 இலட்சம் முதல் 12 இலட்சம் வரையிலான வருடாந்திர வருமானத்திற்கு கிட்டத்தட்ட 15% வரை வருமான வரி விதிக்கப்படுகிறது, 12 இலட்சம் முதல் 15 இலட்சம் வரையிலான வருடாந்திர வருமானத்திற்கு கிட்டத்தட்ட 20% வரை வருமான வரி விதிக்கப்படுகிறது.
15 இலட்சத்திற்கும் அதிகமான வருடாந்திர வருமானத்திற்கு, 30% வரை வருமான வரி விதிக்கப்படுகிறது, இந்த வரி விதிப்பில் வருகின்ற பட்ஜெட்டில் இரண்டு மாறுதல்கள் இருக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, முதலாவதாக ஜீரோ வரிக்கான வருமான வரம்பு உயர்த்தப்படலாம், இன்னொன்று 15 இலட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி விதிப்பு குறைக்கப்படலாம் என கூறப்படுகிறது.
" முக்கியமாக இந்த பட்ஜெட் மிடில் கிளாஸ் இந்திய மக்களுக்கு ஏற்ற பட்ஜெட் ஆகவும், தற்போதைய பொருளாதார மந்த நிலையை தூக்கி நிறுத்தவும் ஏற்றவாறு வடிவமைக்கப்படுவதாக தகவல் "