A Single Pizza Delivery Priced at $962 - இணையத்தில் வைரலாகும் ஒரு சேதி, அதாவது பிரபல டெலிவரி நிறுவனத்தின் டெலிவரி பாய் ஒருவர், ஒரு பீட்சா டெலிவரிக்கு ரூ 81,227 வசூலித்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது, அதன் உண்மைதன்மை குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
A Single Pizza Delivery Priced at $962 - அமெரிக்காவை மையமாக கொண்டு சர்வதேச அளவில் செயல்பட்டு வரும் பிரபல பீட்சா டெலிவரி நிறுவனம் தான் Dominos, உலகளாவிய அளவில் 21,000 டெலிவரி மையங்களை கொண்டு இயங்கி வருகிறது, கிட்டதட்ட 63 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் Dominos, சிக்கன் விங்ஸ், பாஸ்தா, பீட்சா, கடல் உணவுகள் உள்ளிட்டவைகளை தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்கிறது.
இந்த நிலையில் Dominos நிறுவனத்தின் டெலிவரி பாய் ஒருவர் ஜப்பானில் ஒரு பீட்சா டெலிவரிக்கு 962 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ 81,227) வாங்கி இருப்பதாக ஒரு சேதி இணையத்தில் வைரலாகி வருகிறது, அதாவது சேதி என்னவென்றால் ஜப்பானில் மலை ஏறுபவர் ஒருவர் பியூஜி மலையின் உச்சியில் நின்று கொண்டு Dominos பீட்சா ஆர்டர் செய்து இருக்கிறார்.
டெலிவரி பாயும் ஆர்டரை பெற்றுக் கொண்டு Dominos மையத்தில் பீட்சாவையும் பெற்றுக் கொண்டு, மலையின் அடிப்பகுதி வரை பைக்கில் சென்று விட்டு, பின்னர் ஆறு மணி நேரம் மலையை ஏறி அந்த பீட்சாவை ஆர்டர் செய்தவரிடம் கொடுத்து வந்து இருக்கிறார், 50 டாலர் மதிப்பு உள்ள அந்த பீட்சாவிற்கு, டெலிவரி சார்ஜ் சேர்த்து கிட்ட தட்ட 962 டாலர் (இந்திய மதிப்பில் ரூ 81,227) வசூலிக்கப்பட்டதாம்.
பொதுவாக Dominos யில் ஆர்டர் செய்து அரை மணி நேரத்தில் டெலிவரி செய்யவில்லை எனில் ஆர்டர் இலவசம், அந்த வகையில் இந்த சேதி பொய்யானது என இணையவாசிகள் கூற் வருகின்றனர், ஆனால் இப்போது வைரலாகி கொண்டு இருக்கும் இந்த சேதி பொய் அல்ல, உண்மை தான், ஆனால் நடந்தது மட்டும் 2022 யில் நடந்ததாக கூறப்படுகிறது.