Dubai Property Price Increase -குல்ஃப் டைகர் என்று செல்லமாக அழைக்கப்படும் துபாய் நாட்டில் தற்போது வீட்டு, நிறுவன வாடகைகள் தாறுமாறாக அதிகரித்து வருவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது, அதற்கு என்ன காரணம் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
உலகின் ஆறாவது மிகப்பெரிய பணக்கார நாடாக அறியப்படும் துபாயில் காபி முதல் கார் வரை அனைத்துமே காஸ்ட்லி தான், அந்த நாட்டில் மலிவாக கிடைக்கும் ஒரே ஒரு பொருள் பெட்ரோலியம் தான். சரி இப்போது அந்த துபாய்க்கு என்ன பிரச்சினை என்றால், நாளுக்கு நாள் நம் நாட்டில் எப்படி தங்கம் விலை உயருகிறதோ அது போல துபாயில் நாளுக்கு நாள் வீடு மற்றும் நிறுவனங்களின் வாடகை ஜெட் வேகத்தில் உயருகிறதாம்.
ஒரு பெட்ரூம் கொண்ட ஒரு வீட்டின் வாடகை என்பது துபாயில், ஒரு வருடத்திற்கு இந்திய ரூபாயில் 13 இலட்சங்கள், அதாவது மாதத்திற்கு இந்திய ரூபாயில் 1 இலட்சத்திற்கும் மேல், இது ஒரு சராசரி விலை தான், விலை இதைக் காட்டிலும் அதிகமாகவும் இருக்க வாய்ப்புகள் இருக்கலாம், சில மெயின் ஆட இடங்களில் எல்லாம் வருடத்திற்கு 22 இலட்சங்கள் கூட வாடகைகள் இருப்பதாக சொல்கின்றனர், துபாயைப் பொறுத்த வரை வருடத்திற்கு 5 சதவிகிதம் 7 சதவிகிதம் எல்லாம் உயர்வுகள் இல்லையாம், நேரடியாக 30 சதவிகித வாடகை உயர்வு தானாம்.
சரி, இந்த வாடகை உயர்வுக்கு என்ன காரணம்?
அதிகப்படியான இருப்பிட நிலங்களை வாங்க நினைப்பவர்களாலும், குத்தகை தாரர்கள் அதிகரித்ததாலும், துபாயில் இருப்பிட நிலங்களின் தேவை 20 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறதாம், அதாவது துபாயில் ஒரு நிலம் வாங்குவது என்பது தற்போதைய சூழலில் மிக மிக கடினமாம், இந்த தேவை அதிகரிப்பே வாடகை அதிகரிப்பிற்கும் காரணம் என்று சொல்லப்படுகிறது, துபாயை பொறுத்தவரை கிட்ட தட்ட 90 சதவிகிதம் இருப்பிட நிலங்களை சந்தைப்படுத்தும் முறைமையை, ஒரு 9 நிறுவனங்கள் தான் தன் வசப்படுத்தி இருக்கின்றன.
கடந்த 8 மாதத்தில் மட்டும் 86,000 பிளான்கள் முடிக்கப்பட்டு இருக்கிறதாம், இன்னும் 4 மாதத்தில் 40,000 பிளான்கள் போடப்பட இருக்கிறதாம், அடுத்த வருடத்திற்குள் இவைகள் அனைத்தும் விற்பனைக்கு வரும் என்று கூறுகின்றனர். குறிப்பிட்ட நிறுவனங்களுக்குள் சிக்குகின்ற அதிகப்படியான இருப்பிட நில விற்பனைகளால் அவர்கள் நிர்ணயிப்பது மட்டுமே விலையாக இருக்கிறது என்று கூறப்படுகிறது. இன்னொரு மிகப்பெரிய காரணம் நிலத்தை விற்பதை விட வாடகைக்கு விடுவது அதிக இலாபம் கொடுப்பதால் யாரும் விற்பதற்கும் தயாராக இல்லையாம்.
பெருகி வரும் இருப்பிட நில தேவைகள், குறிப்பிட்ட நிறுவனங்களுக்குள் சிக்கி கிடக்கும் நில விற்பனைகள் இவை எல்லாம் இணைந்து துபாயில் வாடகையை உயர்த்தி விட்டு இருக்கிறது, பெரும்பாலான நில உரிமை குறிப்பிட்ட நிறுவனங்களுக்குள் இருப்பதும் தேவையும் விலையும் அதிகரிப்பிற்கு காரணமாக கூறப்படுகிறது.