• India
```

கடுமையான பொருளாதார தடைகள்!! ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்..

Donald Trump Warns Russia

By Dhiviyaraj

Published on:  2025-01-24 16:37:11  |    37

ரஷ்யா, உக்ரைன் போரால் பல மக்களும், நாடுகளும் பாதித்து வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பேசியுள்ளார்.

ரஷ்யா, உக்ரைன் போரால் பல மக்களும், நாடுகளும் பாதித்து வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பேசியுள்ளார். 

அதில் அவர், அமெரிக்காவில் ஒரு வலுவான நிர்வாகம் இருந்திருந்தால், ரஷ்யா-உக்ரைன் மோதல் ஏற்பட்டிருக்காது. என் ஆட்சிக் காலத்தில் ரஷ்யா, உக்ரைன் மீது தாக்குதல் நடத்த தயங்கியிருக்கும். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும், இல்லையெனில் மிக கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்று டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் போரினால் ஐரோப்பிய நாடுகள் மிகப்பெரிய அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருகின்றன. இதன் விளைவாக, அவர்கள் உக்ரைனுக்கான உதவியை குறைத்துள்ளனர். அமெரிக்கா தொடர்ந்து உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவதா என்பதையும் பரிசீலித்து முடிவு செய்யும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமைதியை விரும்புகிறார். எனவே, ரஷ்யாவும் உக்ரைனும் விரைவில் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும், இது தற்போதைய சூழ்நிலைக்கு தேவையான ஒன்று என்றும் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன், டொனால்டு டிரம்ப் விரைவில் தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.