Future Industry Concept - ஆட்கள் இல்லாமல் வெளிச்சம் இல்லாமல் முழுக்க முழுக்க ரோபோட்களால் செயற்கை நுண்ணறிவு சாதனங்களால் இயங்கும் Dark Factory குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Dark Factory என்பதை கருத்துருவாக்கத்தில் சொல்ல வேண்டுமானால் மனிதர்கள் அல்லாமல் முழுக்க முழுக்க இயந்திரங்கள், ரோபோட்கள், செயற்கை நுண்ணறிவு சாதனங்கள் கொண்டு இயங்கும் ஒரு தொழிற்சாலை ஆகும், இந்த தொழிற்சாலை ஒரு நாளுக்கு 24 மணி நேரம் என வாரம் முழுக்க, மாதம் முழுக்க, வருடம் முழுக்க இயங்கும் வல்லமை பெற்றது என கூறப்படுகிறது.
எதிர்காலத்தில் தொழிற்சாலைகள் இப்படி தான் இருக்க கூடும் என்கின்றனர் ஆய்வாளர்கள், இந்த தொழிற்சாலைகளில் அதி நவீன ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன, அதி நவீன செயற்கை நுண்ணறிவு சாதனங்களுடன் இணைப்பில் இருக்கும் ரோபோக்கள் தொழிற்சாலைகளின் செயல்பாடுகளை உற்றுநோக்கி அதற்கு ஏற்ப செயல்படும் வல்லமை பெற்றவைகளாக இருக்குமாம்.
தொழிற்சாலை முழுவதும் உள்ள சென்சார்கள் மற்றும் IoT சாதனங்களின் மூலம், இயந்திரங்களின் செயல்பாடு, உற்பத்தி அளவு, வெப்பநிலை போன்ற தகவல்கள் சேகரிக்கப்பட்டு, இந்தத் தகவல்கள் நிறுவனத்தின் மேலாண்மைக்கு பகிரப்படும், இதனால் உற்பத்தி செயல்முறை தன்னிச்சையாக மேம்படும், வெளிச்சங்களே இல்லாமல் கூட இந்த தொழிற்சாலைகள் இயங்கும்.
இதனால் தொழிற்சாலைக்கு தேவைப்படும் மின்சாரம் கம்மி ஆகும், ஊழியர்களுக்கான சம்பளம் மிச்சம் ஆகும், உற்பத்தியை பன் மடங்கு அதிகரிக்க முடியும், மனித பிழைகள் குறையும், சரி இதில் பிரச்சினை ஏதும் இல்லையா என்றால் மனித சக்தி மட்டுப்படுத்தப்படும், வேலை இழப்புகல் அதிகமாக இருக்கும், சைபர் பாதுகாப்பு மிகப்பெரிய சவாலாக இருக்கும்.