Cyber Frauds In India 2024 - உலகளாவிய அளவில் இந்தியாவில் தான் அதிக சைபர் கிரைம் மோசடிகள் நிகழ்வதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது, நிகழ் ஆண்டில் முதல் 9 மாதங்களில் மட்டும் இந்தியர்கள் சைபர் கிரைம் மோசடிகள் மூலம் இந்தியர்கள் ரூ 11,333 கோடிகள் இழந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது, பாதுகாப்பற்ற செயலிகள், மொபைல்கள் இந்த குற்ற செயலுக்கு ஊன்றுகோலாக இருப்பதாக தகவல்.
இந்தியர்கள் பயன்படுத்தும் ஒட்டு மொத்த மொபைல்களில் கிட்டதட்ட 43% பாதுகாப்பற்ற மொபைல்கள் ஆக அறியப்படுகிறது, 27% செயலிகள் பாதுகாப்பற்ற செயலிகள் ஆக அறியப்படுகிறது, இது போக லோன் செயலிகள், பாதுகாப்பற்ற கால்கள், பாதுகாப்பற்ற மெசேஜ்கள், பாதுகாப்பற்ற இணையங்கள் என இதன் மூலமும் இந்தியர்கள் அதிகப்படியான வங்கி இருப்புகளை இழப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
உங்களது சிம் முடக்கப்பட இருக்கிறது, நீங்கள் அனுப்பிய கொரியரில் தடை செய்யப்பட்ட பொருள் இருக்கிறது, ஆதார் பான் கார்டுகளை இலவசமாக இணைக்கும் லிங்க், உங்களது மொபைலில் நீங்கள் தகாத லிங்குகளை தேடி இருக்கிறீர்கள், உங்களை டிஜிட்டல் முறையில் கைது செய்ய இருக்கிறோம் என பல வார்த்தைகளை கூறி பயனர்களை பயத்திற்கு உள்ளாக்கி மோசடிகள் அரங்கேறுகின்றன.
இது மட்டும் அல்லாமல் வெளிநாட்டு எண்கள் மூலம் உங்கள் போன்களுக்கு கால் செய்து அல்லது மெசேஜ் செய்து, நீங்கள் கால் அட்டண்ட் செய்ததும், மெசேஜை ஓபன் செய்ததும், உங்கள் மொபைலை ஹேக் செய்யும் தொழில் நுட்பங்கள் மூலமும் பணத்தை சைபர் கிரைம் கொள்ளையர்கள் கொள்ளையடித்து வருகின்றனர், இவ்வாறாக பல விதங்களில் நடைபெறும் மோசடிகளில் இருந்து உஷாராக இருக்கும் படி இந்திய சைபர் கிரைம் பாதுகாப்பு பிரிவு தகவல் விடுத்து இருக்கிறது.