• India
```

உலகின் முன்னனி ஹெல்த் ஹேர் நிறுவனத்தின் 2,900 ஊழியர்கள் பணி நீக்கம்!

CVS Health Firing News Today | CVS Health News

CVS Health Firing News Today -சர்வதேச அளவில் முன்னனு ஹெல்த் ஹேர் நிறுவனமாக அறியப்படும் சிவிஎஸ் ஹெல்த் ஹேர் நிறுவனம் தங்களது ஹெல்த் ஹேர் நிறுவனத்தில் பணி புரியும் 2,900 ஊழியர்களை பணி நீக்கம் செய்து இருக்கிறது.

CVS ஹெல்த் ஹேர் நிறுவனம்

சர்வதேச அளவில் இரண்டாவது மிகப்பெரிய ஹெல்த் ஹேர் நிறுவனமாக அறியப்படும் CVS  ஹெல்த் ஹேர் நிறுவனம் அமெரிக்காவை மையமாக கொண்டு செயல்பட்டு வருகிறது, மருந்து சேவைகள், இன்சூரன்ஸ் சேவைகள், ஆய்வ சேவைகள் என பல பிரிவுகளில் செயல்பட்டு வரும் CVS ஹெல்த் ஹேர், கிட்ட தட்ட 9,700 கிளைகளை வைத்து இயங்கி வருகிறது. கிட்ட தட்ட 3,00,000 உழியர்கள் இந்த நிறுவனத்தில் பணி புரிந்து வருகின்றனர். இந்த நிறுவனத்தின் வருடாந்திர வருமானம் மட்டும் 357.8 பில்லியன் டாலராக்க இருக்கிறது.


இவ்வளவு பெரிய நிறுவனத்தில் பணி நீக்கம் ஏன்?

இந்த நிறுவனத்தின் கீழ் இயங்கி வந்த ஒரு சில கிளைகளின் இலாபம் தொடர்ந்து குறைந்து வந்ததாக கூறப்படுகிறது, ஒரு சில கிளைகளில் சுத்தமாக எந்த ஒரு விற்பனையும் பெரிதாக நடைபெறவில்லையாம், இதனை கருத்தில் கொண்டு, சரியாக இலாபம் தராத கிளைகளை எல்லாம் வேறு இடத்திற்கு மாற்றியும், நல்ல வசதியான மக்கள் கூடும் இடத்தில் கிளைகள் இருந்தும் கூட, இலாபம் தராத கிளைகளில் பணி புரிவர்களை நீக்கவும் உததரவிட்டு இருக்கிறது சிவிஎஸ் ஹெல்த் ஹேர் தலைமை.


இதனை கருத்தில் கொண்டு தான் நிறுவனத்தில் பணி புரிந்த 2,900 ஊழியர்கள் நீக்கப்பட்டு இருக்கின்றனர், இதனால் நிறுவனத்திற்கு 2 பில்லியன் டாலர் மிச்சம் ஆகும் என கூறப்படுகிறது. ஊழியர்கள் நீக்கப்பட்ட இடத்தில் எல்லாம் நிறுவனத்தின் செயல்பாடுகளில் ஏதாவது பாதிப்பு இருக்குமா என்று கேட்டால் நிச்சயம் எந்த வித பாதிப்பும் துளி கூட இருக்காது என்கின்றனர் நிறுவனர்கள்.


பொதுவாகவே பல முன்னனி நிறுவனங்கள் தொடர்ந்து தங்கள் நிறுவனத்தில் பணி நீக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதே சிவிஎஸ் நிறுவனம் கடந்த ஜூலையில் தான் ஒரு மிகப்பெரிய, லே ஆஃப் செய்து இருந்த நிலையில் மீண்டும் 2,900 ஊழியர்களை நீக்கம் செய்து இருக்கிறது