Longest Working Hour Countries - எந்த நாடு, உலகிலேயே அதிகமான வார வேலை நேரம் கொண்டு இருக்கிறது என்பதை ஆராய்ந்து சர்வதேச தொழிலாளர் கூட்டமைப்பு நிறுவனம் அறிக்கை விடுத்து இருக்கிறது, அது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Longest Working Hour Countries - பொதுவாகவே அலுவலக வேலை நேரம் குறித்து ஒரு பக்கம் ஊழியர்களும், இன்னொரு பக்கம் நிறுவனங்களும் சமீப காலமாக சமூக வலைதளங்களில் சண்டை பிடித்துக் கொண்டு இருக்கின்றனர், ஒரு பக்கம் நிறுவன தலைமைகள் வார வேலை நேரத்தை அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன, இன்னொரு பக்கம் ஊழியர்கள் அலுவலகத்தில் வேலை செய்வதையே தவிர்த்து வருகின்றனர்.
இந்த இருவருக்கும் இடையேயான போராட்டம் ஆரம்பித்தது என்னவோ கொரோனா காலத்தில் தான், கொரோனோ சூழலில் ஊழியர்கள் அனைவரும் கிட்டதட்ட ஒரு 3 வருடங்களுக்கு வீட்டில் இருந்தே பணி புரியும் வாய்ப்பு கிட்டியது, அந்த சமயத்தில் நிறுவனங்கள் டிமாண்ட் இருந்ததால் பல ஊழியர்களை வேலைக்கு எடுத்து தங்களது டிமாண்ட்களை பூர்த்தி செய்தது.
கொரோனோ முடிந்ததும் டிமாண்ட் குறைந்தது, வருமானமும் குறைந்தது, ஊழியர்கள் அதிகம் தேவைப்படவில்லை, நிறுவனங்கள் பல நாடுகளில் பல ஊழியர்களை வேலையை விட்டு தூக்கினர், தற்போது 3 பேர் செய்யக்கூடிய ஒரு வேலையை, ஒரே ஒரு ஊழியர் செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது, அதாவது ஒரு ஊழியர் அலுவலகத்தில் வேலை செய்தாலும் கூட வீட்டில் வந்தும் அந்த பணியை தொடர வேண்டி இருக்கிறது.
அந்த வகையில் சர்வதேச தொழிலாளர் கூட்டமைப்பு நிறுவனம் வெளியிட்டு இருக்கும் அறிக்கை ஒன்றில் இந்தியா உலகிலேயே அதிகமான வார வேலை நேரத்தை கொண்டு இருப்பதாக ஒரு அதிர்ச்சிகர தகவல் வெளியாகி இருக்கிறது, அதாவது சராசரியாக ஒரு ஊழியர் இந்தியாவில் ஒரு வாரத்தில் 56 மணி நேரம் பணியில் அமர்த்தப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அதாவது வார இறுதி நாட்களை எடுத்து விட்டால், இந்தியாவில் ஒரு ஊழியர் ஒரு நிறுவனத்தில் நாள் ஒன்றுக்கு கிட்டதட்ட 11 மணி நேரத்திற்கும் மேலாக பணியில் அமரத்தப்படுகிறாராம், இது வெறும் அலுவலக நேரம் மட்டும் தானாம், இன்னும் சிலர் அலுவலகத்திலும் வேலை செய்து விட்டு, வீட்டில் வந்தும் வேலை செய்ய நிறுவனங்களால் நிர்ப்பந்திப்படுவதாக தெரிகிறது,
இந்தியாவிற்கு அடுத்து அதிக வார வேலை நேரம் கொண்ட நாடுகளாக, பூட்டான் (53.3 H), வங்க தேசம் (50.4 H), உகாண்டா (50.3 H), கம்போடியா (40.5 H) உள்ளிட்ட நாடுகள் இருக்கின்றன, உலகிலேயே குறைந்த வார வேலை நேரம் கொண்ட நாடாக நெதர்லாந்து இருக்கிறது. வாரத்திற்கு அந்த நாட்டின் ஊழியர்கள் வெறும் 29.8 மணி நேரமே பணியில் அமர்த்தப்படுகிறார்களாம், 30 மணி நேரம் என்று வைத்தால் கூட வாரத்திற்கு 6 மணி நேரமே நெதர்லாந்து ஊழியர்கள் நிறுவனத்தின் பணி புரிகிறார்கள்.