• India
```

ரூ.750-800 கோடி வருமானம்..காக்னிசன்ட் (Cognizant)தலைமையகம் விற்பனை செய்ய திட்டம்..!

Cognizant Today News | Business News in Tamil

Cognizant Today News -அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனம் காக்னிசன்ட் (Cognizant) சென்னையில் உள்ள தனது தலைமையகத்தை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.இதை பற்றி விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.

அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனம் காக்னிசன்ட் (Cognizant) சென்னையில் உள்ள தனது தலைமையகத்தை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.இந்நிலையில்,கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் செயல்பட்டு வரும் இந்த தலைமையகத்தினால் ரூ.750 முதல் ரூ.800 கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காக்னிசன்ட் தலைமையகம் சென்னையின் ஐடி காரிடாரில் 15 ஏக்கர் பரப்பளவைக் கொண்டுள்ளது. 4,00,000 சதுர அடி அலுவலக இடம் இந்த நிலத்தில் உள்ளது. விற்பனைக்கு ஜே.எல்.எல் (JLL) என்ற சர்வதேச சொத்து ஆலோசனை நிறுவனத்தை நியமித்துள்ளது.


விற்பனை இந்த ஆண்டு டிசம்பர் இறுதிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தகவல்கள் படி, காக்னிசன்ட் தனது தலைமையகத்தை MEPZ வளாகத்திற்கு மாற்ற வாய்ப்புள்ளது, மேலும் சென்னையில் இரண்டு மையங்களில் குத்தகை இடங்களை விட்டுக்கொடுக்க முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.

காக்னிசன்ட் தனது செயல்பாடுகளை ஒரே அலுவலகத்திற்கு மாற்ற திட்டமிட்டுள்ளதுடன், JLL, உள்ளூர் டெவலப்பர்களான Baashyaam Group மற்றும் Casagrand-உடன் தொடர்பு கொண்டுள்ளது. இருப்பினும், இன்னும் ஒரு முடிவுக்கு வராத நிலையில், குறித்த விவகாரம் குறித்து காக்னிசன்ட் அல்லது JLL அதிகாரப்பூர்வமாக கருத்து தெரிவிக்கவில்லை.