Chennai Rains Essential Rate Update - சென்னையின் தொடர் மழையை பயன்படுத்திக் கொண்டு அத்தியாவசிய பொருட்களை வியாபாரிகள் அநியாய விலைக்கு விற்றதாக புகார் எழுந்த நிலையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து இருக்கிறது.
Chennai Rains Essential Rate Update - சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக அதிகனமழை பெய்து வருகிறது, இதனால் பல இடங்களில் நீர் தேங்கி நிற்பதால் மக்களுக்கு அத்தியாவசியங்கள் போய் சேருவதில் தடங்கல் ஏற்பட்டு இருக்கிறது, இதனை பயன்படுத்திக் கொண்ட ஒரு சில வியாபாரிகள், காய்கறிகள், அத்தியாவசிய பொருள்கள், பால் உள்ளிட்டவைகளை அதீத விலைக்கு விற்று வருவதாக புகார் எழுந்தது.
காய்கறிகள் எல்லாம் பாரபட்சமே பார்க்காமல் அனைத்தும் கிலோ 100 ரூபாய்க்கு விற்கப்பட்டதாகவும், தக்காளி கிலோ 150 ரூபாய் வரை விற்கப்பட்டதாகவும், அரை லிட்டர் பால் பாக்கெட்டுகள் 60 ரூபாய் வரை விற்கப்பட்டதாகவும் சென்னைவாசிகள் தொடர்ந்து இணையதளங்களில் பதிவிட்டு வந்த நிலையில் தமிழக அரசு புகார்களை உற்று நோக்கி வியாபாரிகளுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.
பேரிடர் சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்டு யாரேனும் அத்தியாவசியங்களின் விலையை உயர்த்தி விற்றால், அவர்களது கடை லைசென்ஸ் ரத்து செய்யப்படும் எனவும், தொடர்ந்து செய்பவர்களின் கடைகள் சீல் வைக்கப்படும் எனவும் அரசு எச்சரித்து இருக்கிறது. அரசின் எச்சரிக்கையை தொடர்ந்து இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு இருக்கும் நிலையிலும் கூட பெரும்பாலான அத்தியாவசியங்களின் விலை சென்னையில் குறைந்து இருக்கிறது.
தக்காளி நேற்று 150 ரூபாய் வரை விற்கப்பட்ட நிலையில் இன்று 80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது, வெண்டைக்காய் கிலோ 100 ரூபாய் விற்கப்பட்ட நிலையில் இன்று 30 முதல் 40 ரூபாய் வரை விற்கப்படுகிறது, வெங்காயம் கிலோ 100 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பல்லாரி கிலோ 100 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று 55 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
" அரை லிட்டர் பால் விலையில் நார்மல் விலைக்கு வந்து தற்போது 35 ரூபாய் வரை விற்கப்படுகிறது, மற்ற பால் நிறுவனங்கள் சென்னைக்குள் பல இடங்களில் வர முடியாத சூழல் இருப்பதால், தமிழக அரசின் ஆவின் நிறுவனம் களத்தில் இறங்கி சென்னை முழுக்க தெரு தெருவாக டெலிவரி செய்து வருவது குறிப்பிடத்தக்கது "