சென்னையில் மெட்ரோ சேவையானது, சென்னை விமான நிலையம் தொடங்கி கோயம்பேடு வழியாக சென்ட்ரல் ரயில் நிலையம் ஒன்றும், பரங்கிமலை தொடங்கி கிண்டி வழியாக விம்கோ நகர் செல்ல ஒரு மெட்ரோ நிலையம் இருக்கிறது.
சென்னையில் மெட்ரோ சேவையானது, சென்னை விமான நிலையம் தொடங்கி கோயம்பேடு வழியாக சென்ட்ரல் ரயில் நிலையம் ஒன்றும், பரங்கிமலை தொடங்கி கிண்டி வழியாக விம்கோ நகர் செல்ல ஒரு மெட்ரோ நிலையம் இருக்கிறது.
தற்போது மெட்ரோ சேவைக்கு மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு இருக்கிறது. கடந்த 2024 ஆம் ஆண்டு மட்டும் 10 கோடி பேர் மெட்ரோவில் பயணித்துள்ளதாக கூறப்படுகிறது
இப்போது சென்னையில் மெட்ரோ நிலையத்தில் இரண்டாம் கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கலங்கரை விளக்கம் தொடங்கி பூவிருந்தவல்லி புறவழிச்சாலை வரை மெட்ரோ நிலையமும், சிறுசேரி சிப்காட் தொடங்கி மாதவரம் வரை, சோழிங்கநல்லூர் தொடங்கி மாதவரம் மொத்தம் மூன்று மெட்ரோ நிலையம் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் உலகிலேயே முதன்முறையாக, ஒரே தூணில் 5 ரெயில் தண்டவாளங்கள் அமைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திட்ட இயக்குநர் அர்ஜுனன் தெரிவித்துள்ளார்.
கலங்கரை விளக்கம் முதல் பூவிருந்தவல்லி புறவழிச்சாலை வரை மெட்ரோ திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, வடபழனி முதல் போரூர் வரை உள்ள 4 கி.மீ. தொலைவில், ஒரே தூணில் 4 ரெயில் பாதைகள் அமைக்கப்படுகின்றன.