Birth Certificate Is Mandate For Passport - பாஸ்போர்ட் எடுக்க பிறப்பு சான்றை ஆதாரம் ஆக்கி அதை கட்டாயம் ஆக்கி இருக்கிறது மத்திய அரசு.
பாஸ்போர்ட் என்பது ஒருவர் வெளிநாடுகளுக்கு படிப்பதற்கோ, தொழிலுக்காகவோ, சுற்றுலாவிற்கோ என எதற்காக செல்ல வேண்டுமானாலும் மிக மிக முக்கியமான ஆவணமாக பார்க்கப்படுகிறது, அது கைகளில் இல்லை எனில் ஒருவர் விமான நிலையத்தை கூட தாண்ட முடியது, அந்த வகையில் பாஸ்போர்ட் எடுக்க இந்தியாவில் பல வழிமுறைகள் இருக்கின்றன.
ஒரு சில முக்கிய ஆவணங்களும் பாஸ்போர்ட் எடுப்பதற்கு அவசியம் ஆகிறது, முன்பெல்லாம் ஒருவர் பாஸ்போர்ட் எடுக்க வேண்டுமானால் பிறப்பு சான்று என்பது மட்டுமே பிறந்த தேதிக்கான ஆவணமாக கொள்ளப்படும், ஆனால் ஆதார் கார்டு வந்ததற்கு அப்புறம் பாஸ்போர்ட் எடுப்பதற்கு ஆதார் மட்டுமே போதுமான ஆவணமாக கருதப்பட்டது.
ஒருவர் பாஸ்போர்ட் எடுப்பதற்கு பிறந்த தேதி, முகவரி, பெயர் என அனைத்தையும் சரிபார்ப்பதற்கு ஆதார் என்னும் ஒரே ஒரு ஆவணம் மட்டுமே போதுமானதாக கருதப்பட்டது, ஆனால் தற்போது மத்திய அமைச்சகம் அதில் ஒரு திருத்தம் செய்து இருக்கிறது, அதாவது பிறந்த தேதிக்கான ஆவணமாக பிறப்பு சான்றிதழை மத்திய அமைச்சகம் கட்டாயப்படுத்தி இருக்கிறது.
சரி இது எல்லாருக்குமா என்றால் இல்லை, அதாவது அக்டோபர் 1, 2023 க்கு அப்புறம் பிறந்த அத்துனை பேருக்கும் பிறந்த தேதிக்கான ஆவணம் பிறப்பு சான்றிதழ் மட்டுமே என கட்டாயப்படுத்தி இருக்கிறது, இனிமேல் அவர்கள் பாஸ்போர்ட் எடுக்க வேண்டும் ஆனால் பிறந்ததேதிக்கு பிறப்பு சான்றிதழ் கட்டாயம் ஆக ஒப்ப்டைக்க வேண்டும்.