• India
```

உலகின் பணக்கார பிச்சைக்காரர்...மாத வருமானம் ரூ 75000...நிகர சொத்து மதிப்பு மட்டும் 7.5 கோடியாம்...!

Bharat Jain The Indian Richest Beggar

By Ramesh

Published on:  2024-12-11 00:01:01  |    148

Bharat Jain The Indian Richest Beggar - இந்தியாவின் மும்பையின் பிரபலமான தெருக்களில் பிச்சை எடுக்கும் ஒருவர், உலகின் மிக பணக்கார பிச்சைக்காரர் ஆக உருவெடுத்தது எப்படி என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Bharat Jain The Indian Richest Beggar - பாரத் ஜெயின், மும்பையில் காலம் காலமாக வசிப்பவர்களுக்கு இவரை நிச்சயம் தெரிய வாய்ப்பு இருக்கிறது, மக்கள் அதிகமாக கூடும் சத்ரபதி மஹாராஜ் சிவாஜி முனையம் மற்றும் ஆசாத் மைதானத்தின் நெருக்கமான சந்தை பகுதிகளில், தனியாக அமைதியாக நின்று கொண்டு, சாலையில் செல்லும் யாரையும் அதிகமாக தொந்தரவு செய்யாமல் பிச்சை எடுத்துக் கொண்டு இருப்பார்.

பிச்சை தானே எடுக்கிறார், இவரிடம் என்ன இருந்து விட போகிறது என யாரும் தவறாக நினைத்து விட வேண்டும், மும்பையில் இரண்டு பிளாட்டுகள் சொந்தமாக வைத்து இருக்கிறார், இரண்டு கடைகளை மாதம் 30,000 ரூபாய்க்கு சந்தையில் வாடகைக்கு விட்டு இருக்கிறார், பணத்தை பல நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து இலாபகரமாக மாற்றி வருகிறார்.



இவருடைய சொத்து மதிப்பு மட்டு தற்போதைய மதிப்பில் 7.5 கோடி இருக்கலாம் என கூறப்படுகிறது, இவர் ஒன்றும் அந்த அளவிற்கு பிறப்பிலேயே பணக்காரர் இல்லை, ஏழ்மையான குடும்பம் தானாம், நாள் ஒன்றுக்கு 10 முதல் 12 மணி நேரம் மக்கள் கூடும் இடங்களாக பார்த்து பிச்சை எடுப்பாராம், நாள் ஒன்றுக்கு ரூ 2000 முதல் ரூ 2500 வரை அதன் மூலம் வருமானம் ஈட்டுவாராம்.

மாதத்திற்கு என்று கணக்கிட்டால் ரூ 60,000 முதல் 75,000 வரை சம்பாதிப்பாராம், இவருடைய சம்பளத்தை இன்று இந்தியாவில் இருக்கும் 60% பொறியாளர்கள் கூட நெருங்க முடியாததாக இருக்கிறது, இவர் கிட்டத்தட்ட 40 வருடங்களாக பிச்சை எடுத்து வருகிறாராம், பிச்சை என்பதை ஒரு அன்பாக வேண்டுதலாக பாரத் ஜெயின் பார்ப்பதாக கூறுகிறார், இதன் மூலம் பலருக்கும் பல உதவிகளையும் செய்து வருவதாக தகவல்.

" பாரத் ஜெயின் மட்டும் அல்ல, சம்பாஜி காலே, லெட்சுமி தாஸ் உள்ளிட்ட பிச்சை காரர்களும் 1 கோடி முதல் 1.5 கோடி வரை நிகர சொத்துக்களை கொண்டு இருக்கிறார்களாம் "