• India
```

இனி குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்தமுடியாது...கிடுக்குப்பிடியான மசோதாவை நிறைவேற்றியது ஆஸ்திரேலியா...!

Bill To Ban Children From Social Media

By Ramesh

Published on:  2024-11-27 17:44:29  |    132

Bill To Ban Children From Social Media - குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதை தவிர்க்க ஆஸ்திரேலியா ஒரு மசோதாவை நிறைவேற்றி இருக்கிறது, அது குறித்து இங்கு பார்க்கலாம்.

Bill To Ban Children From Social Media - பொதுவாக குழந்தைகள் சமூக வலைதளங்களிலேயே தற்போதெல்லாம் மூழ்கி கிடப்பதால், அவர்களின் குழந்தை பருவத்தையே மொத்தமாக இழப்பதாக ஒரு கருத்து வெளியாகி வருகிறது, அது மட்டும் அல்லாமல் அவர்கள் எந்த ஒரு Maturity யும் இல்லாமல் சமூகவலைதளங்கள் பயன்படுத்துவது என்பது அவர்களுக்கே பாதுகாப்பு இல்லாமல் ஆகி விடும் என்றதொரு கருத்தும் இருந்து வருகிறது.

இது போக குழந்தைகள் சமூக வலைதளங்களில் வெளியிடும் தகவல்கள் அவர்களுக்கே ஒரு சில சமயங்களில் பாதுகாப்பற்றதாக மாறி விடுகிறது, ஒரு சில பெண் குழந்தைகளும் சமூக வலைதளங்களை பாதுகாப்பற்ற முறையில் பயன்படுத்தி வருவதால் பல சிக்கல்கள் எழுகிறது, ஒரு சில பெற்றோர்களும் குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதை ஊக்குவிப்பதால் பல விபரிதங்கள் நிகழ்கிறது.



இதனை கருத்தில் கொண்டு தான் ஆஸ்திரேலிய அரசு புதிய மசோதா ஒன்றை நிறைவேற்றி இருக்கிறது, அதாவது 16 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளும் இனி சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கப்படும் என ஆஸ்திரேலிய அரசு அறிவித்து இருக்கிறது, ஏதேனும் சமூக வலை தளங்கள் குழந்தைகளை அனுமதித்தால் 50 மில்லியன் டாலர் வரை அபராதம் விதிக்கப்படும் என அரசு அறிவித்து இருக்கிறது.

இந்த மசோதாவை நிறைவேற்றுவதில் பல சிக்கல்கள் இருக்கிறது, பொதுவாக எந்த சமூக வலைதளங்களும் புதிய கணக்கு திறப்பதற்கு ஐடிகள் எல்லாம் கேட்க முடியாது, அந்த வகையில் குழந்தைகள் எளிதாக வயதை மாற்றி கணக்கை துவங்கி விட முடியும், இந்த மசோதா நல்ல வகையில் என்றாலும், இந்த மசோதாவை நிறைவேற்றுவதில் பல சிக்கல்கள் இருப்பதாக பொதுவானவ்ர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.