Rice ATM In Odisha - ஒடிசா அரசின் நியாய விலை கடைகள், மக்கள் அரிசி வாங்குவதற்கு என்று பிரத்யேக ATM ஒன்றை அறிமுகப்படுத்தி இருக்கிறது, அது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பொதுவாக ரேசன் கடையில் அரிசி வாங்க வேண்டும் என்றால் எப்போது சென்றாலும் ஒரு 10 பேருக்கு பின்னால் நிற்க வேண்டிய சூழல் தான் இருக்கும், அது நியாயமாக எல்லா நியாய விலை கடைகளிலும் நிகழும் ஒரு சூழல் தான், இதில் நெட் கிடைக்கவில்லை என்றாலும் பிரச்சினை என்று ஒரேடியாக நாளை பார்க்கலாம் என்று சொல்லி அனுப்பி விடுவார்கள்.
இத்தகைய பிரச்சினைகளை கையாளவே, ஒடிசா அரசு ஆனது Annapurti Grain ATM என்ற பெயரில் அரிசி ATM ஒன்றை நாட்டில் அறிமுகப்படுத்தி இருக்கிறது, அதாவது நியாய விலை அட்டைதாரர்கள் இனி நியாய விலை கடைகளுக்கு சென்று அரிசி வாங்க வேண்டும் என்று அவசியம் இல்லை, நேரடியாக இந்த ATM க்கு வந்து கார்டை சொருகினால் உங்களுக்கான் அரிசி உங்கள் சாக்குகளில் விழுந்து விடும்.
அதிலும் முக்கியமாக இந்த ATM யில் 24 மணி நேரமும் செயல்படும் என்பதால் பல மணி நேரம் இனி மக்கள் நியாய விலை கடைகளில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை, வந்து கார்டை சொருகி அரிசி வாங்கிக் கொண்டு சென்று கொண்டே இருக்கலாம், இது இந்தியாவிலேயே ஒடிசாவில் தான் முதல் முதல் அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதாக தகவல்.
இந்த அரிசி ATM மூலம் ஒருவர் அதிகபட்சமாக 50 கிலோ வரை அரிசி பெற முடியும், முதற்கட்டமாக புவனேஸ்வர் நகரின் மான்செஸ்வர் பகுதியில் இந்த அரிசி ATM அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது, கொஞ்சம் கொஞ்சமாக 30 மாவட்டங்களிலும் இந்த அரசி ATM யை ஒடிசா விரிவுபடுத்த இருக்கிறது, கார்டு உள்ளவர்கள் தான் வாங்குகிறார்களா என்பதை தெரிந்து கொள்ள கைரேகையும் மெசினில் வைக்க வேண்டி இருக்குமாம்.