AI And LayOffs - வரும் காலங்களில் செயற்கை நுண்ணறிவு ஆனது எந்த எந்த துறையில் அதிக வேலை இழப்பை ஏற்படுத்தும் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
AI And LayOffs - பொதுவாக செய்ற்கை நுண்ணறிவு கடந்த 20 ஆண்டுகளாகவே ஆராய்ச்சியில் இருந்தாலும் கூட தற்போது அதன் ஆதிக்கம் என்பது எல்லா துறைகளிலும் அதிகரித்து இருக்கிறது, பல நிறுவனங்களும் தங்களுக்கென ஒரு கஸ்டமைஸ்டு AI இருக்க வேண்டும் என விரும்புகின்றன, Google, Tesla, Meta என பல உலகின் முன்னனி நிறுவனங்களும் AI ஆராய்ச்சியில் தற்போது மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.
அதே சமயத்தில் இந்த AI ஆனது பல்வேறு துறைகளில் வேலை இழப்பையும் ஏற்படுத்தி வருவதாக ஒரு தகவலும் அவ்வப்போது வெளியாகி வருகிறது, கூகுள் நிறுவனம் எல்லாம், கடந்த நிதி ஆண்டிலேயே தங்களது 25 சதவிகித செயல்பாடுகளை AI மூலம் செய்ய ஆரம்பித்து விட்டதாம், பொதுவாக தயாரிப்பு துறைகளை விட தொழில்நுட்ப துறைகளில் தான் AI யின் ஆதிக்கம் என்பது தற்போது அதிகமாக இருக்கிறது,
எதிர்காலத்தில் தொழில்நுட்ப துறைகளை விட, தயாரிப்பு துறைகளில் தான் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது, முன்பெல்லாம் ஒரு காரை செய்வதற்கு குறைந்தபட்சம் 15 முதல் 20 பேர் வேலையில் ஈடுபட வேண்டி இருக்குமாம், தற்போது அது 4 முதல் 5 ஆக குறைந்து இருக்கிறது, AI நுழையும் பட்சத்தில் அது ஒருவர் அல்லது இருவராக கூட ஆகலாம் என கூறப்படுகிறது.
AI வேலை இழப்பை ஏற்படுத்துமா என்றால் நிச்சயம் ஏற்படுத்தும், அந்த வேலை இழப்பை ஏற்படுத்தும் நிறுவனங்களுள், முதல் இடத்தில் தொழில் நுட்ப நிறுவனங்கள் இருக்கும், இரண்டாம் இடத்தில் தயாரிப்பு நிறுவனங்கள் இருக்கும் எனவும் கூறப்படுகிறது, எதிர்காலங்களிலும் மருத்துவம், ஹெல்த் டெக் உள்ளிட்ட துறைகளிலும் AI வேலை இழப்பை ஏற்படுத்தி தனது ஆதிக்கத்தை காட்டும் என கூறப்படுகிறது.