• India
```

வெறும் 10 சதவிகிதம் பேரிடம்...குவிந்து கிடக்கும் 57% பணம்...இந்தியாவில் 100 கோடி மக்களிடம் செலவழிக்க பணமே இல்லையாம்...!

100 Crores Indian Have No Money To Spend Non Essential Items

By Ramesh

Published on:  2025-02-28 09:35:30  |    58

100 Crore of Indians Are Struggling to Afford Non-Essential Items - இந்தியாவில் வெறும் 10 சதவிகிதம் பேரிடம் மட்டுமே 57 சதவிகித பணம் குவிந்து இருப்பதாகவும், 100 கோடி மக்களிடம் செலவழிக்க பணமே இல்லை என ஒரு ஆய்வில் தகவல் வெளியாகி இருக்கிறது.

முன்பெல்லாம் ஒரு தொழில் செய்பவர்கள் ஒரு சிறிய முதலீட்டில் ஆரம்பித்து ஓரளவிற்கு வருமானத்துடன், அதே தொழிலை அடுத்த சந்ததிக்கு கொண்டு செல்வார்கள், அவர்கள் அடுத்த சந்ததிகளுக்கும் சொல்லி கொடுத்து தொழிலை விரிவு செய்வார்கள், பின்னர் ஒரு சந்ததியினர் அந்த தொழிலை நன்கு கற்றுக் கொண்டு நிறைய விற்பனைகளை பெருக்கி அந்த தொழிலில் கொடி கட்டி பறப்பார்கள்,

இவ்வாறாக ஒரே தொழில் தான் அவர்களின் சந்ததிகளை மேம்படுத்திக் கொண்டே வரும், அந்த தொழிலும் அவ்வாறாகவே வளர்ந்து கொண்டு வரும், ஆனால் இன்றைய சூழலில் தொழில்களை மேற்கொள்ளும் கார்பரேட்கள் அதில் கிடைக்கும் இலாபத்தை இன்னொரு தொழிலில் போடுகிறார்கள், இன்னொரு தொழிலில் இருந்து இன்னொரு தொழில் என பல துறைகளை ஆட்கொள்ள நினைக்கிறார்கள்.



இதன் விளைவு எங்காவது ஒரு ஊரில், எங்காவது ஒரு இடத்தில் இருந்து, சிறு தொழில் செய்து கொண்டு இருப்பவர்கள் அந்த கார்பரேட் நிறுவனத்தை எதிர்க்க முடியாமல் காணாமலே போய் விடுகிறார்கள், ஒருவரே பல தொழிலை மேற்கொள்ளும் போது அத்துனை தொழிலில் ஆதிக்கமும் அவர்களிடம் போய் விடுகிறது, 100 பேரில் ஒருவர் பிழைக்கிறார், 99 பேர் பிழைக்க முடியாத சூழல் உருவாகி விடுகிறது.

இத்தகைய சூழல் தான் இன்று 100 கோடி பேரை இதர செலவுகளுக்கு கூட பணம் இல்லாத சூழலுக்கு தள்ளி இருக்கிறது, பிரபல முதலீட்டு நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்தியாவில் இருக்கும் 56 சதவிகித பணம் வெறும் 10% பேரிடம் குவிந்து இருப்பதாகவும், மீதி 90% பேர் அதாவது 100 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் இதர செலவுகளுக்கு கூட பணம் இல்லாமல் இருக்கிறார்களாம்.

" இந்த முடிவுகள் ஏதும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இல்லை, இங்கு சிறு குறு நிறுவனங்களுக்கு பல்வேறு வாய்ப்புகள் இருந்தாலும் கூட அவர்கள் யானையின் கீழ் மிதிபடும் எறும்பாக தான் இருக்க முடிகிறது என்பது தான் உண்மை "