Yamaha Bikes Diwali Offers 2024 - யமஹா பைக் நிறுவனம் அதிரடி தீபாவளி ஆபராக பைக்குகளுக்கு ரூ 7000 வரை தள்ளுபடி அறிவித்து இருப்பது வாடிக்கையாளர்களை குஷியில் ஆழ்த்தி இருக்கிறது.
Yamaha Bikes Diwali Offers 2024 - தீபாவளி திருநாளுக்கு இன்னும் மூன்று நாட்கள் தான் இருக்கும் நிலையில் பல பைக் நிறுவனங்களும் தங்களது தயாரிப்பு பைக்குகளுக்கு தேசம் முழுவதும் பல ஆபர்களை அறிவித்து வருகின்றன, ஜப்பானை மையமாக கொண்டு இயங்கி வரும் யமஹா தயாரிப்பு நிறுவனம், இந்தியா முழுக்க தங்களது தயாரிப்புகளுக்கு ஒரு மிகப்பெரிய மார்க்கெட்டை உருவாக்கி இருக்கிறது.
அந்த வகையில் தீபாவளி நெருங்கி விட்டதால் யமஹாவும், தனது பங்கிற்கு வாடிக்கையாளர்களுக்கு ஆபர்களை அள்ளி குவித்து வருகிறது. இந்தியாவில் இருக்கும் அனைத்து யமஹா ஷோரூம்களிலும் FZ-S Fi Ver 4.0, FZ-S Fi Ver 3.0 மற்றும் FZ Fi உள்ளிட்ட பைக்குகளுக்கு ரூபாய் 7000 வரை தள்ளுபடி ஆபர்கள் வழங்கப்படுகிறதாம், அது போக EMI மூலம் ரூ 7999 மட்டும் செலுத்தி FZ பைக்குகளை பெற்றுக் கொள்ளலாம்.
Fascino 125 Fi Hybrid மற்றும் RayZR 125 Fi Hybrid மாடல்களுக்கு ரூ 4000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும் இந்த வகை பைக்குகளை EMI மூலம் டவுண் பேமெண்ட் ரூ 2999 மட்டும் செலுத்தி பைக்குகளை பெற்றுக் கொள்ளலாம். இந்த ஆபர்கள் தேசம் முழுக்க உள்ள அத்துனை யமஹா ஷோரூம்களிலும் வழங்கப்பட இருக்கிறதாம், மேலும் ஆபர்களை தெரிந்து கொள்ள யமஹா ஷோரூம்களை அணுகலாம்.
இது போக பழைய மாடல் யமஹா பைக்குகளுக்கு வழக்கமான விற்பனை விலையில் ரூ 10,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறதாம், எக்சேஞ் ஆபர்கள் மூலம் பைக்குகளை பெறும் வசதியையும் ஷோரூம்கள் செய்து இருக்கிறதாம், எக்சேஞ்கள் மூலம் வாங்கப்படும் பைக்குகளுக்கு அதிக எக்சேஜ் விலை கொடுக்கப்பட்டு எடுக்கப்படும் புது பைக்குகளுக்கு ரூ 3000 வரை தள்ளுபடி யமஹா வழங்குகிறதாம். அப்புறம் என்ன இந்த வருடம் யமஹா தீபாவளி தான்.