Windows 10 Supports Ends - உங்களோட லேப்டாப்ல Windows 10 OS போட்டு வச்சிருந்தீங்கன்னா மாத்திடுங்க, டெட்லைன் அறிவிச்சிட்டாங்க.
பொதுவாகவே மொபைல் மற்றும் லேப்டாப், டெஸ்க்டாப்களுக்கான ஆபரேட்டிங் சிஸ்டங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் அடுத்தடுத்த புது புது வெர்சன்களை அறிமுகப்படுத்தும் போது பழைய ஆபரேட்டிங் சிஸ்டங்களுக்கான சப்போர்ட்ஸ்சை முழுவதும் நிறுத்திக் கொள்ளும், அப்படி தான் ஆண்ட்ராய்டுகளும், விண்டோஸ் நிறுவனங்களும் காலம் காலமாக செயல்பட்டு வருகின்றன,
அப்படித்தான் Windows 10 அறிமுகப்படுத்தப்பட்ட போது Windows 7 க்கான சப்போர்ட்ஸ்களை மைக்ரோசாப்ட் நிறுவனம் முழுவதும் நிறுத்தியது, ஆண்ட்ராய்டுகளும் புதிய புதிய ஆபரேட்டிங் சிஸ்டங்களை அறிமுகப்படுத்தும் போது பழைய ஆண்ட்ராய்டுகளுக்கான சப்போர்ட்டை முழுவதுமாக நிறுத்தி வந்தன, தற்போது Windows 10 க்கான சப்போர்ட் முழுவதும் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
அக்டோபர் 14, 2025 Windows 10 க்கான சப்போர்ட் நிறுத்தப்படுவதற்கான கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது, இதற்கு பின் OS வேலை செய்யாதா என்றால் வேலை செய்யும், ஆனால் நேரடியாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இருந்து இந்தவித OS களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு சேவைகள், தொழில்நுட்ப சேவைகள் முழுவதுமாக நிறுத்தப்படும்.
இதனால் இந்த வித OS களில் செயல்படும் கம்ப்யூட்டர்கள் அதிக செக்யூரிட்டி ரிஸ்க்குகளுக்கு உள்ளாகலாம், கூடுமான வரை Windows 11 ஆபரேட்டிங் சிஸ்டத்திற்கு மாறிக் கொள்ள மைக்ரோசாப்ட் நிறுவனம் வாடிக்கையாளர்களை பரிந்துரைக்கிறது, ஒரு குறிபிட்ட காலத்திற்கு Windows 10 க்கான பாதுகாப்பு புதிப்புகளை பெற முடியும், ஆனால் அதற்கு ஒரு குறிப்பிட்ட கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.
" ஆனால் அதற்கு பதிலாக ஒரு புதுப்பிக்கப்பட்ட Windows 11 அப்டேட் செய்வதே சிறந்தது என்கிறார்கள் மென்பொருள் வல்லுநர்கள் "