Why VLC Media Player Is Ads Free - VLC Player என்றதொரு வீடியோ பிளேயிங் பிளாட்பார்ம் இங்கு அனைவருமே கேள்வி பட்டும் இருப்போம், அதில் மட்டும் ஏன் விளம்பரம் வருவதில்லை என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
VLC பிளேயர் என்பது வீடியோலேன் (VideoLAN) என்ற இலாப நோக்கமற்ற பிரான்சு அமைப்பால் உருவாக்கப்பட்டது. அவர்களின் முக்கிய குறிக்கோள் அனைவருக்கும் இலவச மற்றும் திறந்த மூல மீடியா பிளேயரை வழங்குவதாகும், இதன் ஆரம்பம் என்பது 1998 காலக்கட்டம், அப்போது தான் VLC ப்ளேயருக்கான கோடிங் ஸ்க்ரேட்சில் இருந்து எழுதப்பட்டது.
பெரும்பாலும் இந்த ப்ளேயரை உருவாக்குவதில் நிறைய தன்னார்வலர்களே ஈடுபட்டதால் இது ஒரு இலாபநோக்கமற்ற மென்பொருளாகவே வெளியானது, பெரிய பெரிய நிறுவனங்கள் எல்லாம் விளம்பரங்களுக்காக மில்லியன் மில்லியன் டாலர்கள் கொடுத்த போதும் வீடியோலேன் நிறுவனம் அதை வாங்க மறுத்து விளம்பரம் இல்லாத மென்பொருளாகவே செயல்பட விரும்பியது.
இன்றளவும் விளம்பரங்கள் ஏதும் இல்லாமல் தான் செயல்பட்டு கொண்டு இருக்கிறது, வீடியோலேன் அமைப்பு பயனர் தனியுரிமைக்கு உறுதிபூண்டுள்ளது. அவர்கள் பயனர் தரவை சேகரிப்பதைத் தவிர்க்கிறார்கள், விளம்பரங்கள் கொடுத்தால் வாடிக்கையாளர்கள் தங்கள் தரவுகளை அதில் இழக்க கூடும் என்பதையும் கருத்தில் கொண்டே விளம்பரங்களை அவர்கள் தள்ளி வைத்தார்கள்.
பெரும்பாலும் தன்னார்வர்களின் நன்கொடை மூலமாக மட்டுமே இந்த வீடியோலேன் அமைப்பு முழுக்க முழுக்க செயல்பட்டு வருகிறது, இலாப நோக்கங்களுக்காக செயல்படுவதைக் காட்டிலும் பயனர் அனுபவத்திற்கு அவர்கள் முன்னுரிமை அளிக்கிறார்கள், இதனால் தான் VLC Player என்பது இன்றளவும் பயனர்களால் விரும்பி பதிவிறக்கம் செய்யப்படுகிறது.