• India
```

BSNL 5G சேவை...இந்தியாவில் எப்போது துவங்கும்...?

When Will BSNL Launch its 5G Network Details Here

By Ramesh

Published on:  2024-11-21 01:43:39  |    192

When Will BSNL Launch its 5G Network Details Here - BSNL 5G சேவை குறித்த ஒரு அப்டேட் வெளியாகி இருக்கிறது, அது என்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் முழுமையாக பார்க்கலாம்.

When Will BSNL Launch its 5G Network Details Here - இந்திய அரசால் நிர்வகிக்கப்படும் BSNL சேவை சமீப காலமாக அட்டகாசமான சேவைகளால் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது, ஒரு பக்கம் ஜியோ, வோடபோன், ஏர்டெல் நிறுவனங்கள் தங்களது 8.3 மில்லியன் வாடிக்கையாளர்களை இழந்து இருக்கும் நிலையில், கடந்த அக்டோபரில் மட்டும் 4.3 மில்லியன் வாடிக்கையாளர்களை இணைத்து இருக்கிறது BSNL.

நெட்வொர்க்குகளுக்கு இடையேயான கடுமையான போட்டிகளாலும், 4G, 5G என சென்று கொண்டு இருக்கும் மற்ற நெட்வொர்க்குகளுக்கு மத்தியில், இன்னுமே பல இடங்களில் 3G யை தாண்ட முடியாததாலும், கடந்த நிதி ஆண்டில் மட்டும் BSNL தனது 18 மில்லியன் வாடிக்கையாளர்களை இழந்தது, ஆனால் இந்த நிதி ஆண்டில் கடந்த நிதி ஆண்டை விட அதிகமாக 25% வாடிக்கையாளர்களை தற்போது வரை இணைத்திருக்கிறது BSNL.



இன்னும் வளர்ச்சி தொடரும் என்னும் பட்சத்தில், BSNL தங்களது 5G சேவையை துவங்க முனைந்து இருக்கிறது, இந்தியாவின் தலைநகரான புதுடெல்லியின் நேரு நகர், சாணக்கியாபுரி மற்றும் மிண்டோ சாலை என மூன்று இடங்களில் 5G சேவையை BSNL பரிசோதித்து இருக்கிறது, வெற்றிகரமாக பரிசோதனையும் முடிந்து இருக்கிறது, அடுத்தகட்டமாக 1 இலட்சம் இடங்களில் 4G சேவையை BSNL விரிவு படுத்த இருக்கிறது.

இந்த 4G வேலைகள் 2025 யின் நடுப்பகுதியில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதற்கு பின்னர் இந்த சேவைகள் அனைத்திலும் 5G பரிசோதிக்கப்பட்டு நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் என BSNL அறிவித்து இருக்கிறது, அடுத்த வருடம் தாமதம் இன்றி BSNL ஆனது 5G யில் இறங்கும் பட்சத்தில் இந்தியாவில் ஒரு மிகப்பெரிய நெட்வொர்க் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கும் வாய்ப்பை நிச்சயம் BSNL பெறும்.