WhatsApp To End Support For Older Phones - WhatsApp நிறுவனம் ஒரு சில பழைய போன்களின் இனி WhatsApp செயல்படாது என அறிவித்து இருக்கிறது, அது எந்தெந்த மொபைல்கள் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
WhatsApp To End Support For Older Phones - WhatsApp என்பது ஒரு குறுஞ்செய்தி தகவல் பரிமாற்ற சாதனம், ஒரு தகவலையோ, ஒரு போட்டோவையோ, ஒரு ஆவணங்களையோ உடனடியாக ஒருவருக்கு அனுப்புவதற்கும் பொழுது போக்கிற்கும் உகந்த ஒரு செயலியாக பார்க்கப்படுகிறது, Meta நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் WhatsApp உலகில் அதிக பயனாளர்கள் பயன்படுத்துகின்ற ஒரு செயலியாக பார்க்கப்படுகிறது.
உலகளாவிய அளவில் கிட்டதட்ட 3 மில்லியன் பயனர்கள் WhatsApp யை பயன்படுத்துவதாக தகவல், உலகிலேயே அதிக அளவில் WhatsApp பயன்படுத்தும் பயனர்களை கொண்டு இருக்கும் நாடு என்பது இந்தியாவாக இருக்கிறது, இந்தியாவில் கிட்டதட்ட 540 மில்லியன் பயனர்கள் WhatsApp பயன்படுத்துவதாக தகவல், ஒரு நாளுக்கு WhatsApp யின் அனுப்பும் மெசேஜ் மட்டும் 600 மில்லியனை தாண்டுமாம்.
உலகளாவிய அளவில் இத்துனை பயனாளர்களை கொண்டு இருக்கும் WhatsApp நிறுவனம், தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது, அதாவது பழைய iPhone களில் இனி WhatsApp செயல்படாது என அறிவித்து இருக்கிறது, iOS 15.1 க்கு முந்தைய பதிப்புகளில் WhatsApp களின் செயல்பாடுகள் முற்றிலுமாக நிறுத்தப்படும் என Meta நிறுவனம் அறிவித்து இருக்கிறதாம்.
இதனால் iPhone 5S, iPhone 6, iPhone 6+ உள்ளிட்ட மொபைல்களை பயன்படுத்தும் பயனர்கள் இனி WhatsApp யை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும், ஆனாலும் இதற்கு May 2025 வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது, அதற்கு முன்னதாக சாதனங்களை மாற்றியோ, அப்டேட் இருப்பின் அப்டேட் செய்து கொண்டோ பயனர்கள் வைத்துக் கொண்டால் அவர்களுக்கு இந்த அறிவிப்பு சிரமமாக ஈராது என மெட்டா அறிவித்து இருக்கிறது.