Whatsapp New Update Features -ஒருவருடன் உரையாடுவது மட்டுமல்லாமல், ஒன்றிற்கும் மேற்பட்ட நபர்களுடன் ஒரே நேரத்தில் தகவல்களைப் பகிரவும், குழுக்களில் உரையாடவும் இந்த செயலி பயன்படுகிறது.
Whatsapp New Update Features -உலகம் முவுவதும் உள்ள அனைத்து மக்களும் மிகவும் அதிகமாக பயன்படுத்தி வரும் ஒரு செய்தி பரிமாற்று செயலியாக வாட்ஸ் அப் உள்ளது.இதைப் பயன்படுத்தி தங்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் என யாரிடம் வேண்டுமானாலும் உரையாட முடியும். மேலும், இதில் வாய்ஸ் மற்றும் வீடியோ அழைப்புகள் வசதிகளும் இருக்கிறது.தமிழ் உட்பட பல மொழிகளில் கிடைக்கிறது, இதனால் தமிழ் பேசும் பயனர்களுக்கு எளிமையாக பயன்படுத்துகிறார்கள்.
இந்த வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி பல தகவல்களை மிகவும் விரைவாக அனுப்ப முடியும் பிறரிடம் இருந்து பெற முடியும். ஒருவருடன் உரையாடுவது மட்டுமல்லாமல், ஒன்றிற்கும் மேற்பட்ட நபர்களுடன் ஒரே நேரத்தில் தகவல்களைப் பகிரவும், குழுக்களில் உரையாடவும் இந்த செயலி பயன்படுகிறது.
24 மணி நேரத்தில் காணப்படும் புகைப்படங்கள், வீடியோக்கள், மற்றும் உரையாடல் இவைகளை ஸ்டேட்டஸ்களில் பகிரலாம்.இது, உங்கள் தகவல்ககளை என்டு டூ என்டு குறியாக்கம் மூலம் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்யும் தொழில்நுட்பம் ஆகும். மேலும்,வாட்ஸ் அப் செயலி புதுப் புது அப்டேட்களை வெளியிட்டு கொண்டிருக்கிறது.
அதே போல், தற்பொழுது வாட்ஸ் அப்பில் Voice Note Transcription என்ற புதிய அப்டேட் அறிமுகமாக உள்ளது. இந்த அப்டேட் மூலம், வாய்ஸ் மெசேஜ் ஆக அனுப்பும் குறிஞ்செய்திகளை, அதே மொழியில் எழுத்து வடிவில் மாற்றி கொள்ளலாம் என்று தெளிவு படுத்தப்பட்டுள்ளது. இந்த அப்டேட் ஆண்ட்ராய்டு போன்கள் பயன்படுத்துவர்களுக்கு முதலில் கொடுக்கப்படவுள்ளது.