• India
```

உலகின் எந்த மூலையிலும் இணைய சேவை...Starlink இந்தியாவிற்கு வந்தால் இந்திய நெட்வொர்க்குகள் அனைத்திற்கும் ஆப்பா...?

What is Starlink When Will It Be Launched In India

By Ramesh

Published on:  2024-11-26 02:18:00  |    223

What is Starlink When Will It Be Launched In India - நேரடியாக Satelites மூலம் இணைய சேவையை வழங்கும் Starlink இந்தியாவிற்கு வருமா, வந்தால் எப்போது வரும், அதன் விலை என்ன, அதன் பயன் என்ன என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.

What is Starlink When Will It Be Launched In India - Starlink என்பது மொபைல் நெட்வொர்க், பிராட்பேண்ட் என எதுவும் இல்லாமல் நேரடியாக Satelites மூலம் இணைய சேவையை வழங்கும் ஒரு அமைப்பு ஆகும். எலான் மஸ்க்கின் SpaceX நிறுவனத்தின் மூலம் இந்த Starlink செயல்படுத்தப்பட்டு வருவதாக தகவல், இந்த Starlink உங்கள் கைகளில் இருக்கும் பட்சத்தில் உலகின் எந்த மூலை முடுக்கிலும் நீங்கள் தடையில்லா இணையசேவையை பயன்படுத்திட முடியும்.

சரி அது தான் மொபைல் நெட்வொர்க் இருக்கே, பிராட்பேண்டுகள் இருக்கிறதே என்றால், சரி நீங்கள் சுற்றுலாவிற்காக வெளிநாடு செல்கிறீர்கள், இல்லையேட் ட்ரிப்பிற்காக மலை ஏறுகிறீர்கள், கடலுக்குள் செல்கிறீர்கள் என்னும் போது உங்களது மொபைல் நெட்வொர்க்குகளின் இணைய சேவை முடங்கி விடும், அதுவே ஸ்டார்லிங் கையில் இருந்தால் தடையில்லா இணைய சேவை கிடைக்கும்.



அடுத்த வருடம் இந்தியாவில் Starlink விற்பனை செய்யப்பட இருப்பதாக ஒரு தகவல், ஸ்பீடை பொறுத்தவரை இந்தியாவில் Fiber கனெக்சன் தரும் இணையசேவையை விட Starlink யின் இணைய ஸ்பீடு கம்மியாக தான் இருக்கும் என கூறப்படுகிறது, தடையில்லாமல் இணைய சேவையை பயன்படுத்த முடியும் என்பதை தவிர பெரிதாக ஒன்றும் இருப்பதாக தெரியவில்லை.

சராசரியாக 100 Mbps என்பது தான் Starlink யின் ஸ்பீடாக கருதப்படுகிறது, இந்தியாவில் Fiber கனெக்சன் தரும் அதிகபட்ச ஸ்பீடு என்பது 1000 Mbps ஆக இருக்கிறது, ஆதலால் இந்தியர்கள் 1.50 இலட்சம் கொடுத்து Starlink வாங்கி, மாதம் 7,500 ரூபாய் அதற்கு கட்ட வேண்டும் என்ற அவசியம் இருக்காது, இந்திய நெட்வொர்க்குகளுக்கும் Starlink கால் எந்த பாதிப்பும் இருக்காது.