• India
```

810 படுக்கைகள், 160 கி.மீ. வேகத்தில்..! புதிய வந்தே பாரத் ரயிலில் பல அம்சங்கள்!!

Vande Bharat Train News | Vande Bharat Train Latest News

Vande Bharat Train News -அதிநவீன வசதிகள் கொண்ட வந்தே பாரத் இரயில் இந்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிமுகம் எய்து வைத்தார்.அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.

Vande Bharat Train News -கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள  பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத்  மாதிரி இரயிலை இந்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிமுகம் செய்து வைத்தார். 

அதிநவீன வசதிகள் கொண்ட இந்த இரயிலை இந்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பார்வையிட்டார்.மேலும், அவர் கூறுகையில் இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க தருணம் என்று கூறினார். 

 

அதிநவீன வசதிகள் கொண்ட இந்த ரயில் சராசரியாக 160 கி.மீ. வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.மேலும், மக்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டிருத்த வந்தே பாரத் மாதிரி இரயில் மூன்று வகுப்புகளை கொண்டுள்ளது. அதில், மூன்றாம் AC வகுப்பில் 11 பெட்டிகளும், இரண்டாம் AC  வகுப்பில் 4 பெட்டிகள் மற்றும் முதல் AC வகுப்பில் ஒரு பெட்டி என மொத்தம் 16 பெட்டிகளை கொண்டுள்ளது.இதில் மொத்தமாக 810 படுக்கைகள் இருக்கின்றன.


ஐரோப்பாவில் உள்ள இரயில்களுக்கு இணையான வசதிகள் கொண்ட இந்த ரயிலில் பயணிகளின் படுக்கையில் இரவு நேரத்தில் படிப்பதற்காக மின்விளக்கு மற்றும் சார்ஜிங் போன்ற வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பாதுகாப்பு கேமராக்கள் பொறுத்தப்பபட்டுள்ள்ளது.பயணிகளுக்கு பொது அறிவிப்பு வசதிகள் ஏற்பாடு செய்யப்பபட்டுள்ளது.

முதல் AC  வகுப்பில் ஷவருடன் கூடிய குளியலறை அமைக்கப்பட்டிருக்கிறது. மாற்றுத் திறனாளிகளுக்கு பயனுள்ள வகையில் சிறப்பு படுக்கைகள் மற்றும் அவர்களுக்கென தனி கழிவறைகள் அமைக்கப்பட்டிருக்கிறது.


மேலும், இதனுடைய சோதனை ஓட்டம் விரைவில் தொடங்கும்.எனவும், படுக்கை வசதிகளைக் கொண்ட வந்தே பாரத் இரயில் 3 மாதங்களுக்குப் பிறகு பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது .இதனுடைய கட்டண விபரங்கள் பற்றி இது வரையில் எந்தவிதமான அறிவிப்பும் தற்போழுது வெளியிடப்படவில்லை  என்பது குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது.