• India
```

கடந்த அக்டோபரில் மட்டும் 16 பில்லியன் UPI பரிவர்த்தனைகள்...டிஜிட்டல் மயமாகும் இந்தியா...!

UPI Stats October 24

By Ramesh

Published on:  2024-11-08 17:21:06  |    196

UPI Stats October 24 - இந்தியாவில் கடந்த அக்டோபரில் மட்டும் 16 பில்லியன் UPI பரிவர்த்தனைகள் நடந்து இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது.

UPI Stats October 24 - இந்தியாவில் ஒரு மிகப்பெரிய அத்தியாவசிய பரிவர்த்தனை கருப்பொருளாக ஆகி விட்டது UPI, ஒரு சிறிய தள்ளுவண்டி கடை முதல், நாட்டின் மிகப்பெரிய வர்த்தக நிறுவனங்கள் வரை அனைத்திலும் இன்று UPI ஆதிக்கம் செலுத்துகிறது, எளிய முறையிலான வர்த்தக பரிமாற்றத்தை மேற்கொள்ள ஏதுவாக இருப்பதால் எளிய மக்களிடம் UPI சென்றடைந்தது தான் UPI யின் மிகப்பெரிய வெற்றி ஆக பார்க்கப்படுகிறது.

கிட்டதட்ட நிகழ் வருடத்தில் மட்டும் 200 ட்ரில்லியன் UPI பரிவர்த்தனைகள் இந்தியாவில் நடந்து இருக்கிறதாம், முன்பெல்லாம் ஒரு 100 ரூபாய் இன்னொருவர் அக்கவுண்ட்டிற்கு அனுப்புவதற்கே, ஒரு இரண்டு பார்ம் நிரப்பிக் கொடுத்து, பின்னர் அதற்கு 2 மணி நேரம் வங்கிகளில் செலவிட்டு, அதற்கு அடுத்து ஒரு 3 மணி நேரம் கழித்து தான் அந்த பணம் நாம் அனுப்புவர்களின் அக்கவுண்ட்டில் வரவு வைக்கப்படும்,



ஆனால் தற்போது அடுத்த செகண்ட்டிலேயே ஒருவருக்கு பணத்தை அனுப்ப முடிகிறது, பொதுவாக இந்தியாவில் ஒரு நாளுக்கு பெரிய பெரிய பரிவர்த்தனைகள் செய்பவர்களை விட குட்டி குட்டி பண பரிவர்த்தனைகள் செய்பவர்கள் தான் அதிகம், அவர்களை மையப்படுத்தி ஆரம்பிக்கப்பட்ட UPI அவர்களிடம் முழுமையாக சென்றடைந்து இருக்கிறது என்று உறுதியாகவே சொல்ல முடியும்.

கடந்த அக்டோபரில் மட்டும் சராசரியாக தினசரி 535 UPI பரிவர்த்தனைகள் நிகழ்ந்து இருக்கின்றன, கடந்த செப்டம்பரில் தான் இந்தியாவின் தினசரி UPI பரிவர்த்தனை 500 மில்லியனைக் கடந்தது, ஒட்டு மொத்தமாக கடந்த செப்டம்பர் 2024 யில் இந்தியாவில் 15 பில்லியன் பரிவர்த்தனைகள் பதிவான நிலையில், அக்டோபரில் UPI பரிவர்த்தனைகள் 16.58 பில்லியனாக அதிகரித்து இருக்கிறது.