• India
```

இனி ஆப்பிள் தான் கெத்து...அடுத்தடுத்து வர இருக்கும் மாஸ் தயாரிப்புகள்...!

Upcoming Expected Apple Launches

By Ramesh

Published on:  2024-10-14 09:47:45  |    386

Upcoming Expected Apple Launches - ஆப்பிள் நிறுவனம் வரும் மாதங்களில் அடுத்தடுத்து பல மாஸ் தயாரிப்புகளை வெளியிட இருக்கிறது, அது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Upcoming Expected Apple Launches - ஆப்பிள் நிறுவனம் லேப்டாப், மொபைல், ஏர்போட்ஸ். வாட்ச்கள், ஐபேட் உள்ளிட்ட பல தயாரிப்புகளில் உலகளாவிய ஈடுபட்டு வருகிறது, வாடிக்கையாளர்களுக்கு தரமான, பாதுகாப்பான, புதுமையான எலக்ட்ரானிக் பொருள்களை வழங்கி வருவதில் ஆப்பிள் முன்னனி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. ஆப்பிள் ஏதாவது ஒரு புதுமையான வெளியீட்டை செய்கிறது என்றால் அதை அனைவரும் உற்று நோக்கி கொண்டு இருப்பார்கள், அந்த வகையில் ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்தடுத்த வெளியீடுகள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

1) MacBook Pro M4

ஆப்பிள் நிறுவனத்தின் கடந்த மேக்புக் மாடல்கள் M3, M3 Pro, M3 Max சிப்களுடன் வெளி வந்தன, இனி வரும் மேக்புக் மாடல்கள் M4, M4 Pro, M4 Max சிப்களுடன் வெளிவர வாய்ப்பு இருக்கிறது, மாடல்களும் ஸ்க்ரீன் அளவும் (14 Inch, 16 Inch) கடந்த மாடல்களை போல தான் இருக்கும் என தெரிகிறது. இதுவரை வந்த மேக்புக் மாடல்களில் 8GB RAM மட்டுமே வந்த நிலையில் வரக்கூடிய மேக்புக் மாடல்கள் 16GB RAM வெர்சனில் வர வாய்ப்புகள் இருப்பதாக தகவல்.


2) Mac mini M4

சிறிய அளவில், கையில் எடுத்துக் கொள்ள கூடிய வகையிலான, எந்தவொரு டிஸ்பிளேயிலும் பயன்படுத்திக் கொள்ள கூடிய வகையிலான டெஸ்க்டாப் வகை கம்ப்யூட்டர்களை மேக் மினி என்ற பெயரில் ஆப்பிள் வெளியிட்டு வருகிறது, மேக் மினி M3 வெர்சனை விட அளவில் சிறியதாக, ஸ்லிம்மாக  M4 சிப்களுடன், 16GB RAM வெர்சனில் மேக் மினியின் M4 வெர்சனை விரைவில் ஆப்பிள் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.


3) iMac M4

புதிய சிப் வகையுடன், அதிக ஸ்டோரேஜ், நிறைய வண்ணங்களில், மேஜிக்கல் கீ போர்டு, கலர்புல் மவுஸ் மற்றும் டிராக் பேடுடன் வருகின்ற iMac M4  இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, இதுக்கு முன்னதான iMac மாடலில் இருந்து ஒரு சில ஹார்டுவேர் மாற்றங்களும் வருகின்ற இந்த iMac M4 யில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


4) iPad mini with A18

iPad mini என்பது ஆப்பிள் வெளியிடும் ஒரு சிறிய வகை iPad, வரும் iPad mini வெர்சனில் iPhone 16 யில் பயன்படுத்தப்படும் A18 சிப் வகை பயன்படுத்தப்பட இருப்பதாக தகவல், 8GB RAM இருக்கும் என அறியப்படுகிறது, ஸ்டோரேஜ் 64GB முதல் 128GB வரை இருக்கலாம் என தகவல்.



" இது போக இன்னும் பல வெளியீடுகளை ஆப்பிள் அறிமுகப்படுத்த இருக்கிறதாம், ஏர் போட் உடன் கேமரா, செய்ற்கை நுண்ணறிவுடன் இயங்கும் வாட்ச் என அனைத்தையும் வருகின்ற நவம்பரில் நடக்க இருக்கும் ஆப்பிள் எக்ஸ்பிசனில் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது "