TVS Jupiter 110 CC On Road Price -இந்தியாவில் புளூடூத் கனெக்டிவிட்டியுடன் பெரிய இருக்கை கொண்ட ஸ்கூட்டர்களில் இதுவும் ஒன்று. இதன் அண்டர்சீட் ஸ்டோரேஜ் இடவசதி தாராளமாக இருக்கிறது.
டிவிஎஸ் மோட்டார் கம்பெனி, ஜூபிட்டர் 110 ஸ்கூட்டரின் ஸ்பை ஷாட்கள் சிலவற்றை வெளியிட்டிருந்தது.இதனைத் தொடர்ந்து டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம் நேற்று ஆகஸ்ட் 22 ஆம் தேதி ஜூபிட்டர் 110 லாஞ்ச் செய்துள்ளது.
ஜூபிட்டர் 110 ஸ்கூட்டர் புதிய ஸ்டைலில், இது 125 சிசி மாடலுக்கும், பழைய 110 சிசி மாடலுக்கும் அட்வான்ஸ் ஆனா வகையில், முற்றிலும் புதிய வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல், இதன் வசதிகளும் 125 சிசி மாடலை போன்றே இருக்கும்.குறிப்பாக, எரிபொருள் நிரப்பு முறை முன்புற ஆப்ரானில் இருக்கும், இதனால், சீட்டில் இருந்து இறங்க அவசியம் இருக்காது.
மேலும் இந்த மாடல், பெரிய இருக்கை கொண்ட ஸ்கூட்டர்களில் ஒன்றாகும், அதன்படி இதன் நீளம் அதிகமாக இருக்கும். அண்டர்சீட் ஸ்டோரேஜ் இடவசதி சுமார் 32 லிட்டருக்கு மேல் இருக்கும், அதனால் 2 ஹெல்மெட்களை எளிதில் வைக்க முடியும். மேலும், புளூடூத் கனெக்டிவிட்டியும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.
ஜூபிட்டர் 110 ஸ்கூட்டர் மாடலை பழைய 110 சிசி மாடலுடன் ஒப்பிட்டு பார்க்கும் பொழுது, இந்த மாடல் பவர் மற்றும் டார்க் ஆகியவற்றில் 1bhp மற்றும் 1Nm அதிகரித்துள்ளது. இதனால், 7.9bhp பவரும், 8.8Nm டார்க்கும் இருக்கிறது. இதன் எடை 104 - 110 கிலோவுக்கு இருக்கலாம் என்பதால், அனைவரும் இதனை எளிதாக பயன்படுத்தலாம்.
டிவிஎஸ், இந்த இன்ஜினில் மிகச் சிறந்த வேலை செய்துள்ளது என்று கூறப்படுகிறது. ஒரு ஹைபிரிட் ஸ்கூட்டர் போல இது செயல்படுவதற்காக, கூடுதலாக ஒரு பேட்டரியும் வழங்கப்படுகிறது. இதன் மைலேஜ் 10% அதிகமாக கொடுக்கிறது, குறைந்த விலையில் நல்ல ஸ்கூட்டர் வாங்க நினைப்பவர்களுக்கு உண்மையில் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.மேலும், இந்த ஜூபிட்டர் 110 ஸ்கூட்டரை ரூ.73,700 க்கு வாங்கிவிடலாம்.