TVS King EV Max Auto - பிரபல TVS நிறுவனம் இந்தியாவின் முதல் ப்ளுடூத் கனெக்டடு எலக்ட்ரிக் ஆட்டோவை அறிமுகப்படுத்தி இருக்கிறது.
TVS King EV Max Auto - எலக்ட்ரிக் பைக், எலக்ட்ரிக் கார்கள் வரிசையில் தற்போது கமெர்சியல் வாகனங்களையும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அறிமுகப்படுத்தி வருகின்றன, அந்த வரிசையில் TVS நிறுவனமும், தனது எலக்ட்ரிக் பைக்குகளை அடுத்து கமெர்சியல் எலக்ட்ரிக் வாகன உற்பத்தியில் களம் இறங்கி இருக்கிறது, முதற்கட்டமாக மூன்று சக்கர வாகனங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது,
TVS King EV Max என்று அந்த எலக்ட்ரிக் ஆட்டோவிற்கு பெயரிடப்பட்டு இருக்கிறது, இந்த எலக்ட்ரிக் ஆட்டோ ஒரு சார்ஜில் 179 கி.மீ வரை பயணம் செய்ய முடியும், 3 மணி நேரம் 30 நிமிடத்தில் பேட்டரி முழு சார்ஜை அடையும், டாப் ஸ்பீடு 60 கி.மீ என நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது, 51.2V Lithion Iron LFP பேட்டரி இந்த எலக்ட்ரிக் ஆட்டோவில் பொருத்தப்பட்டு இருக்கிறது.
டிரம் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது, ஒவ்வொரு சக்கரத்திலும் தனியாக பிரேக் கண்ட்ரோல் செய்யும் படி பொருத்தப்பட்டுள்ளது, ரிவர்ஸ் ட்ரான்ஸ்மிசன் உண்டு, ப்ளுடூத் கனெக்சன் இணைப்போடு உருவாக்கப்பட்டு இருக்கும் இந்தியாவின் முதல் ஆட்டோவாக இந்த TVS King EV Max வலம் வர இருக்கிறது, நாவிகேசன், பயண தொகுப்பு, அலர்ட்டுகளும் இந்த எலக்ட்ரிக் ஆட்டோவில் பொருத்தப்பட்டுள்ளன,
இதன் விலை ரூ 2.95 இலட்சமாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது, முதற்கட்டமாக வட இந்தியாவில் இந்த எலக்ட்ரிக் ஆட்டோவை TVS அறிமுகப்படுத்த இருக்கிறதாம், அடுத்த ஒரிரு மாதத்தில் இந்தியா முழுக்க இந்த எலக்ட்ரிக் ஆட்டோ சந்தைப்படுத்தப்படும் எனவும் TVS தரப்பில் கூறப்பட்டுள்ளது, தற்போதைக்கு வெள்ளை மற்றும் ஊதா நிறங்களில் இந்த ஆட்டோ கிடைக்கிறது.