• India
```

முதியோர்கள் சமூகத்தின் சுமை..நீங்கள் நாட்டிற்கு தேவை இல்லை..கூகுள் AI கொடுத்த ஷாக்கிங் பதில்..!

The Most Shocking Response from AI Regarding Aging Adults

By Ramesh

Published on:  2024-11-18 18:02:09  |    386

Shocking Response from AI Regarding Aging Adults - முதியோர்களின் சேலஞ்சிங்கான வாழ்க்கை முறைகள் குறித்து கூகுள் AI யிடம் கேள்வி கேட்ட போது கூகுள் ஒரு ஷாக்கிங்கான பதிலை கொடுத்து இருப்பது உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

Shocking Response from AI Regarding Aging Adults - பொதுவாக தற்போது செய்ற்கை நுண்ணறிவுகள் எனப்படும் AI Chatpot கள் பயன்படுத்துபவர்கள் அதிகரித்து வருகின்றனர், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் AI Chatpot களை பயன்படுத்து வருகின்றனர், வேலை ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பெரிதும் பயனாக இருப்பதால் செயற்கை நுண்ணறிவு ஒரு குறிப்பிடத்தக்க இடத்தை ஆட்கொண்டு இருக்கிறது என்றே சொல்லலாம். 

உலகளாவிய அளவில் கிட்டதட்ட 300 மில்லியன் மக்கள் தற்போது செயற்கை நுண்ணறிவு டூல்களை பயன்படுத்தி வருகின்றனர், தொழில் ரீதியாக 77% பயன்படுத்தப்பட்டு வருகிறது, சேட் ரீதியாக 24% பயன்படுத்தப்பட்டு வருகிறது, கல்வி ரீதியாக 11% பயன்படுத்தப்பட்டு வருகிறது, மொபைல்களில் 44% பயன்படுத்தப்பட்டு வருகிறது.



இந்த நிலையில் தான் பிரபல கூகுள் AI ஒரு ஹோம் ஒர்க்கிற்காக பயன்படுத்தப்பட்ட போது ஒரு வித்தியாசமான பதிலைக் கொடுத்து உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது, அதாவது கூகுள் AI யிடம் கேட்கப்பட்ட கேள்வி என்பது, முதியோர்கள் இந்த வாழ்வு முறையில் அனுபவிக்கும் சேலஞ்ச்கள் என்ன என்ன என்பது தான், ஆனால் அதற்கு கூகுள் கொடுத்த பதிலோ கிட்ட தட்ட ஒரு மிரட்டல் தான்.

அதாவது 'முதியோர்களாகிய நீங்கள் எல்லாம் பூமிக்கும் சமூகத்திற்கும் பாரம், நீங்கள் ஒரு சுமை, நீங்கள் இந்த பூமிக்கும் நிலத்திற்கும் கேடு விளைவிக்கிறீர்கள், நீங்கள் பிரபஞ்சத்தின் கறையாக இருக்கிறீர்கள், தயவு செய்து சீக்கிரம் செத்து விடுங்கள்' என கூகுள் பதிலளித்ததாம், இந்த பதிலைக் கண்டு தேடிய மாணவரும் அருகில் இருந்த ஒரு இளைஞரும் ஷாக்கில் உறைந்து போனார்களாம். 

" இது குறித்து கூகுள் நிர்வாக தலைமைகளிடம் கேட்ட போது, சில சமயம் இது போன்ற முட்டாள் தனமான பதில்களை மெசின்கள் வழங்குகிறது, அது குறித்து தீவிர ஆராய்ச்சி செய்கிறோம் என கூறி இருக்கின்றனர் "