Tesla News Today- டெஸ்லா நிறுவனம் மொபைல் தயாரிப்பில் ஈடுபட இருப்பதாக ஒரு தகவல் கசிந்து வருகிறது, அது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Tesla News Today - எலான் மஸ்க், இந்த மனித உலகில் இருக்கும் அனைத்து நிறுவனங்களையுமே ஆட்டி படைக்க நினைக்க ஆசைப்படுபவர், தனது கால் தடம் இல்லாத துறையே இருக்க கூடாது என நினைப்பவர், இந்த உலகில் எந்த ஒரு துறையிலும், எந்த ஒரு நிறுவனம் தலை தூக்கினாலும், அந்த துறைக்கு எதிராக ஒரு கண்டு பிடிப்பை விதைப்பதை வாடிக்கையாக வைத்து இருக்கிறார் எலான் மஸ்க்.
ஆட்டோ மொபைல், ஐடி நிறுவனம், செயற்கை நுண்ணறிவு நிறுவனம், விண்வெளி துறை, நியூரோ லிங் என பல துறைகளில் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் எலான் மஸ்க், தற்போது டெஸ்லா பெயரில் மொபைல் வெளியிட இருப்பதாக இணையத்தில் தகவல் கசிந்து வந்தது, அதாவது ஆப்பிள் நிறுவனத்திற்கு போட்டியாக டெஸ்லாவின் மொபைல்களை வெளியிடுவது எலான் மஸ்க்கின் நோக்கம் ஆக அறியப்படுகிறது.
Tesla Pi என்பது மொபைலின் பெயர், 8GB/12GB RAM, 128GB/256GB ROM, 6.7'' Display, சூப்பர் அமால்டு Display, 5000mAH பேட்டரி, 60W Fast சார்ஜர், Snapdragon 8 Gen 2 பிராசசர், 64MP + 12MP + 8MP பின் கேமரா, 32MP செல்ஃபி கேமரா இது போக முக்கியமாக சோலார் மூலர் சார்ஜ் ஏறக்கூடிய மொபைல் பேனல் என்று அசத்தலான தரவரைவுகள் எல்லாம் இணையத்தில் வெளியானது,
ஆனால் அது குறித்து எலான் மஸ்க்கின் அதிகாரப்பூர்வ தலைமைகளிடம் விசாரித்த போது தற்போதைக்கு அந்த பிளான்கள் எல்லாம் இல்லை, ரூமர் என்பது ரூமராகவே இருக்கட்டும் என கூறி இருக்கின்றனர், ஆனால் மொபைல் தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்திட எலான் மஸ்க் பேசி வருகிறாராம், ஆனால் அது எப்போது சாத்தியம் ஆகும் என்பது தெரியவில்லை.