• India
```

உங்களிடம் 25 இலட்சம் இருந்தா...உங்க வீட்டு வேலையெல்லாம் செய்ய ஒரு ரோபோ ரெடி...!

Tesla's New Humanoid Robot Optimus

By Ramesh

Published on:  2024-10-14 04:58:28  |    363

Tesla's New Humanoid Robot - செயற்கை நுண்ணறிவை உணர்வுகளாக கொண்டு, உங்கள் வீட்டில் இருக்கும் அனைத்து வேலைகளையும் மனிதர்கள் போல செய்யும் புதிய ரோபோ ஒன்றை அறிமுகப்படுத்தி இருக்கிறது டெஸ்லா நிறுவனம்.

Tesla's Introduced New Humanoid Robot - அது என்ன புது ரோபோ, இதெல்லாம் அப்போவே வந்திடுச்சுல்ல, என்று பொதுவாகவே உங்கள் மனதில் தோன்றி இருக்கும், ஆனால் இது அதை எல்லாம் விட அட்வான்ஸ்டு ரோபோவாம், எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் தயாரித்து வெளியிட்டு இருக்கும் இந்த புதுவகை ரோபோவிற்கு ஆப்டிமஸ் என்று பெயரிட்டு இருக்கின்றனர், இதுவரை இந்த உலகம் கண்டு பிடித்து இருக்கும் ரோபோக்களை எல்லாம் விட ஆப்டிமஸ் மிக மிக அட்வான்ஸ்டாக செயல்படக் கூடியது என எலான் மஸ்க் கூறி இருக்கிறார். 

சரி, ஆப்டிமஸ் அப்படி என்ன செய்து விடும்?

உங்கள் வீட்டை கூட்டி பெருக்கும், உங்கள் துணிகளை துவைக்கும், நீங்கள் விரும்பும் சமையல் செய்திடும், உங்கள் குழந்தைகளை பாதுகாத்துக் கொள்ளும், உங்கள் வீட்டு பூனைக்கு சரியான நேரத்தில் பால் வைக்கும், உங்கள் நாயை வெளியில் வால்க்கிங் கூட்டு செல்லும், உங்கள் கேள்விகளுக்கு பதில் அளித்திடும், உங்கள் குழந்தைகளுக்கு பாடம் நடத்திடும், உங்களது சந்தேகங்களுக்கு தனது செயற்கை நுண்ணறிவின் மூலம் விளக்கம் அளித்திடும், இது மட்டும் அல்ல இன்னும் பல அசாத்திய வேலைகளை செய்யக் கூடியது இந்த ஆப்டிமஸ்.


சரி, இந்த ஆப்டிமஸ்சின் விலை என்ன?

முழுக்க முழுக்க வீட்டு வேலைகளை மட்டும் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கும் இந்த ரோபோவின் விலை 20,000 அமெரிக்க டாலர் முதல் 30,000 அமெரிக்க டாலர் வரை இருக்கும் என அறியப்படுகிறது. அதாவது இந்திய விலையில் 17 இலட்சங்கள் முதல் 30 இலட்சங்கள் வரை இருக்குமாம். தற்போதைக்கு அமெரிக்காவில் மட்டும் இந்த ரோபோவை சந்தைப் படுத்தி இருக்கிறார் எலான் மஸ்க்.

" செயற்கை நுண்ணறிவு என்னும் ஒரு வித்தையை கையில் வைத்துக் கொண்டு வாரத்திற்கு ஒரு கண்டுபிடிப்புகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார் எலான் மஸ்க், ஒரு வேளை இந்த செயற்கை நுண்ணறிவு இன்னும் அதீதமாக வளரும் பட்சத்தில் எதிர்காலத்தில், மனிதனை மிஞ்சுகிற சக்தியும் இதனால் உருவாக வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர் "