Tesla Latest News In Tamil -மிகவும் பிரபலமான டெஸ்லா நிறுவனத்தின் தொழிலதிபர் எலான் மஸ்க் புதியதாக வேலை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேலும்,அந்த ரோபோவுக்கு மனிதர்கள் அன்றாட வாழ்வில் செய்யும் அனைத்து விதமான விஷயங்களையும் எளிய முறையில் கற்றுத்தருவதே இந்த வேலை எனவும், மனிதர்களின் அசைவுகளை பிரதியடுக்கும் மோஷன் கேப்ச்யூர் சூட் உடையையும் VR'ஹெட் செட்டையும் மாட்டி கொண்டு இதன்மூலம் அசைவுகளை ஏற்படுத்தினால் அதே போலவே ரோபோட்டும் செய்யும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், 5.7 முதல் 5.11 வரை உயரம் உடையவர்களாக இருக்க வேண்டும். மேலும், இந்த வேலைக்கு மனிதர்கள் சரியாக 7 மணி நேரம் நடப்பது மிகவும் முக்கியம் என்றும், அப்படி ஒரு நாளுக்கு 7 மணி நேரம் சரியாக நடப்பவர்களுக்கு இந்திய மதிப்பின்படி ரூபாய் 28,000 சம்பளம் கொடுக்கபடும் என்று டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ எலான் மஸ்க் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இவரின் அறிவிப்பையடுத்து, கலிபோனியாவின் பாலோ ஆல்ட்டோவின் டெஸ்லா நிறுவன தலைமையகத்தில் அப்ளிகேஷன்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டிருக்கிறது.