Tamil Nadu Government Allots 14 Crore For AI Research - தமிழக அரசு செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சிக்காக ரூ 14 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அரசாணை வெளியிட்டு இருக்கிறது, அது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Tamil Nadu Government Allots 14 Crore For AI Research - உலகளாவிய செயற்கை நுண்ணறிவிற்கான தேவை என்பது விரிவடைந்து இருக்கிறது, உலகின் மிகப்பெரிய நிறுவனமான கூகுள் தங்களது வேலையை 25 சதவிகிதம் மனிதர்களின்றி முழுக்க முழுக்க செயற்கை நுண்ணறிவின் மூலம் செய்து கொண்டு இருக்கிறது, கூகுள் மட்டும் அல்லாது டெஸ்லா, அமேசான் உள்ளிட்ட பல நிறுவனங்கள் தங்களது நிறுவனங்களுக்குள் AI தொழில்நுட்பத்தை விரிவுபடுத்தி வருகின்றன.
2027 ஆம் ஆண்டிற்குள் கூகுளின் 50 சதவிகித செயல்பாடுகள் AI தொழில் நுட்பத்தின் மூலம் செயல்படும் என அந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது, உலகளாவிய அளவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் 2050 ஆம் ஆண்டிற்குள் 60 சதவிகிதம் அறிவிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது, இந்த நிலையில் தான் தமிழக அரசும் செய்ற்கை நுண்ணறிவில் மாநிலத்தை கொஞ்சம் அப்டேட் ஆக்க நினைத்து இருக்கிறது.
அதாவது தமிழக அரசு சார்பில் தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்கம் (TNAIM) என்றதொரு அமைப்பு தோற்றுவிக்கப்பட்டு, அதன் மூலம் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சிகள் தமிழகத்தில் மேம்படுத்தப்படும் என முதல்வர் அறிவித்து இருக்கிறார், இந்த செயற்கை நுண்ணறிவு இயக்கத்தின் மூலம் தமிழக அரசின் மின்னனு தொழில் நுட்பம் மேலும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்துறை, அறிவியல் ஆராய்ச்சி மற்றும் மருத்துவ துறைகளில் இந்த செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியை முதற்கட்டமாக புகுத்த தமிழக அரசு முடிவெடுத்து இருக்கிறது, இந்த திட்டத்திற்கான தற்போது 13.90 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டு இருக்கிறது, மேலும் பல துறைகளில் இத்திட்டம் விரிவு படுத்தப்படும் பட்சத்தில் மேலும் நிதி ஒதுக்கப்படும்.