Starlink VS BSNL - எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் உலகளாவிய அளவில் ட்ரெண்ட் என்றாலும் கூட இந்தியாவில் அது பலன் அளிக்கவில்லை, ஏன் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Starlink VS BSNL - மொபைல் நெட்வொர்க், பிராட்பேண்ட் என எதுவும் இல்லாமல் நேரடியாக Satelites மூலம் இணைய சேவையை வழங்கும் ஒரு மின்னனு அமைப்பு தான் Starlink, எலான் மஸ்க் அவர்களின் SpaceX நிறுவனத்தின் மூலம் இந்த Starlink செயல்படுத்தப்பட்டு வருவதாக தகவல், இந்த Starlink உங்கள் கைகளில் இருக்கும் பட்சத்தில் உலகின் எந்த மூலை முடுக்கிலும் நீங்கள் தடையில்லா இணையசேவையை பயன்படுத்திட முடியும்.
சரி அது தான் மொபைல் நெட்வொர்க் இருக்கே, பிராட்பேண்டுகள் இருக்கிறதே என்றால், சரி நீங்கள் சுற்றுலாவிற்காக வெளிநாடு செல்கிறீர்கள், இல்லையேல் ஏதேனும் ட்ரிப்பிற்காக மலை ஏறுகிறீர்கள், கப்பலில் செல்கிறீர்கள் என்னும் போது உங்களது மொபைல் நெட்வொர்க்குகளின் இணைய சேவை முடங்கி விடும், அதுவே ஸ்டார்லிங் கையில் இருந்தால் தடையில்லா இணைய சேவை கிடைக்கும்.
ஸ்டார்லிங்கின் கான்சப்ட் வித்தியாசம் காட்டுகிறது, அதே சமயத்தில் உலகளாவிய அளவில் அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு வாங்கவும் முனைகின்றனர், ஆனால் இந்தியா மட்டும் ஸ்டார் லிங்க் குறித்து எந்தவொரு முன்னெடுப்பும் எடுக்கவில்லை, ஸ்டார்லிங்கின் அதிகபட்ச ஸ்பீடு 100Mbps தானாம், நமது BSNL Fiber யின் Basic Super Plan யே நமக்கு 125 Mbps ஸ்பீடோடு அன்லிமிட்டடு டேட்டாவையும் தருகிறது.
ஸ்டார் லிங் பேக்கேஜ் என்பது சராசரியாக கிட்டதட்ட மாதத்திற்கு இந்திய மதிப்பில் 7,425 ரூபாயாக இருக்கிறது, வெறும் 700 ரூபாய்க்கு Unlimited Internet, 125 Mbps, Unlimited Landline Calls, BSNL தரும் போது இந்தியர்கள் யார் ஸ்டார்லிங் வாங்க போகிறார்கள், ஸ்டார்லிங் மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளில் வித்தியாசம் காட்டினாலும் கூட இந்தியாவில் அதன் மதிப்பை BSNL கூட தோற்கடித்து விடும் என்பது தான் உண்மை.