• India
```

மின்னல் வேக Internet Speed கொண்ட நாடுகளின் பட்டியல்...இந்தியா எல்லாம் ரொம்ப பின்னாடி தான் போல...!

Speed Test Global Index

By Ramesh

Published on:  2024-11-23 05:32:28  |    548

Speed Test Global Index - உலகில் அதிவேக Internet Speed கொண்ட நாடுகள் எவை எவை என்பது குறித்து இந்த தொகுப்பில் முழுமையாக பார்க்கலாம்.

Speed Test Global Index - இணையம் என்பது வீட்டிற்கும், நாட்டிற்கும், உலகிற்கும், இந்த உலகம் ஒவ்வொரு துளி இயங்குவதற்கும் என அனைத்திற்கும் அத்தியாவசியம் ஆகி விட்டது, அந்த வகையில் ஒவ்வொரு நாடுகளும் ஒவ்வொரு Internet ஸ்பீடுகளில் இயங்கிக் கொண்டு இருக்கின்றன, அந்த வகையில் உலகின் மிக அதிக இணைய ஸ்பீடுகளை கொண்ட நாடு, எவை எவை என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.

பொதுவாக உலக நாடுகள் மொபைல் மூலம் ஆகவும், பிராட்பேண்டுகள் மூலம் ஆகவும் இணைய வசதியை பெற்று வருகின்றன, உலகளாவிய சராசரி மொபைல் இண்டர்நெட் ஸ்பீடு என்பது 59.15 Mbps ஆக இருக்கிறது, அதேச சமயத்தில் உலகளாவிய சராசரி பீக்ஸடு பிராட்பேண்ட் இண்டர்நெட் ஸ்பீடு என்பது 94.52 Mbps ஆக இருக்கிறது, கிட்டதட்ட மொபைலை விட பிராட்பேண்ட்களில் 2 மடங்கு இணைய ஸ்பீடு அதிகம்.



உலகளாவிய அளவில் அதிக மொபைல் Internet Speed கொண்ட 5 நாடுகள்

1) ஐக்கிய அரபு அமீரகம் - 428.53 Mbps

2) கத்தார் - 356.74  Mbps

3) குவைத் - 258.51  Mbps

4) டென்மார்க் - 149.73  Mbps

5) பல்கேரியா - 147.78  Mbps

இந்தியாவிற்கு இந்த பட்டியலில் 26 ஆவது இடம், இந்தியாவில் மொபைல் Internet Speed 95.67 Mbps ஆக இருக்கிறது.

உலகளாவிய அளவில் அதிக Fixed Broad Band Internet Speed கொண்ட 5 நாடுகள்

1) சிங்கப்பூர் - 316.99 Mbps

2) ஐக்கிய அரபு அமீரகம் - 300.54 Mbps

3) ஹாங்காங் - 296.97 Mbps

4) ஃசில் - 279.14 Mbps

5) அமெரிக்கா - 253.34 Mbps

இந்தியாவிற்கு இந்த பட்டியலில் 89 ஆவது இடம், இந்தியாவில் Fixed Broad Band Internet Speed 63.43 Mbps ஆக இருக்கிறது.