செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பாதுகாப்பு அம்சங்களை ஆய்வு செய்ய தென் கொரியா நடவடிக்கை எடுத்துள்ளது
நம்முடைய காலத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) அபரிமிதமாக வளர்ச்சியடைந்து வருகிறது. அமெரிக்கா மற்றும் சீனா போன்ற நாடுகள் AI வளர்ச்சியில் தொடர்ந்து போட்டியிடுகின்றன.
டீப்சீக் பிரபலமானதைத் தொடர்ந்து, சீனாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான அலிபாபா, 'Qwen 2.5-Max' என்ற புதிய செயற்கை நுண்ணறிவு மொழி மாதிரியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பாதுகாப்பு அம்சங்களை ஆய்வு செய்ய தென் கொரியா நடவடிக்கை எடுத்துள்ளது. குறிப்பாக, டீப்சீக் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை எவ்வாறு கையாள்கிறது என்பதை தெளிவுபடுத்துமாறு தென் கொரியாவின் தனிநபர் தகவல் பாதுகாப்பு ஆணையம் கோரியுள்ளது.
இதுமட்டுமல்லாமல், பிரான்ஸ், இத்தாலி மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளும் டீப்சீக்கின் தகவல் பாதுகாப்பு நடைமுறைகளை ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளன.