Transparent Solar Power Panel - ஒளி ஊடுருவும் கண்ணாடிகளை சோலார் பவர் பேனல் ஆக மாற்றி கொரியன் விஞ்ஞானிகள் அசத்தி வருகின்றனர், அது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பொதுவாக சோலார் பேனல் என்றால் வெட்ட வெளியில் நிலம் வாங்கி வைக்க வேண்டும், இல்லையேல் மாடி இருந்தால் மாடிகளில் வைக்க வேண்டும், ஒரு வீட்டிற்கு தேவையான மின்சாரம் தயாரிக்க வேண்டுமானால் கூட அதிக சோலார் பேனலும், அதிக இடமும் தேவைப்பட்ட நிலையில் கொரியன் விஞ்ஞானிகள் ஒளி ஊடுருவும் கண்ணாடிகளில் சோலார் பேனல் கண்டுபிடித்து அசத்து இருக்கின்றனர்.
சரி, இதனால் என்ன பயன் என்று கேட்டால் இந்த ஒளி ஊடுருவும் கண்ணாடியை வீட்டின் ஜன்னல் கண்ணாடியாகவோ, கதவின் கண்ணாடியாகவோ, மொபைலின் டிஸ்பிளே ஆகவோ என எல்லா இடத்திலும் பயன்படுத்துக் கொள்ளலாம், தனியாக இடம் தேவை இல்லை, மேலும் இந்த பேனல் புற ஊதாக் கதிர்கள், அகச்சிவப்பு கதிர்களை உள்வாங்கி ஆற்றலை தயாரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.
இதனால் ஒரு வீடு கட்டும் போது பெரிய அளவில் சோலார் பேனலை தூக்கி மாடிகளில் இனி வைக்க வேண்டிய அவசியம் இல்லை, வீடு கட்டும் போதே எங்கு எங்கு கண்ணாடிகள் அமைக்கிறோமோ அங்கு எல்லாம் இந்த கண்ணாடி சோலார் பேனலை அமைத்து விட்டால் வீட்டிற்கு தேவையான மின்சாரத்தை அதுவே தயாரித்துக் கொள்ளும், இடமும் தனியான பராமரிப்பும் மிச்சம்.
மொபைல் போன், லேப்டாப் டிஸ்பிளே போன்றவற்றிலும் இந்த கண்ணாடி சோலார் பேனலை டிஸ்பிளேவாக அமைக்க முடியும் என்பதால் இனி மொபைல் போன்களுக்கும் லேப்டாப்களும் இந்த டிஸ்பிளேவை மாட்டி விட்டால் அதுவே கதிர்களை உட்கொண்டு அதற்கான சார்ஜ்களை அதுவே ஏற்றிக் கொள்ளும், நிச்சயம் இந்த கண்ணாடி பேனல் சோலார் உலகில் பல இன்னோவேசன்களை கொண்டு வரும்.