சீன அரசு செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளித்து, கொள்கைகளை உருவாக்கி, அதற்கான ஆய்வுகளுக்கு பெரிதும் ஆதரவு வழங்கி வருகிறது.
சீன அரசு செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளித்து, கொள்கைகளை உருவாக்கி, அதற்கான ஆய்வுகளுக்கு பெரிதும் ஆதரவு வழங்கி வருகிறது. ஆனால், இந்தியாவில் இதுபோன்ற சூழல் காணப்படவில்லை என தொழில்நுட்ப வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சர்வதேச அளவில் செயற்கை நுண்ணறிவு போட்டியில் இந்தியாவும் முன்னணியில் இருப்பதை உறுதிசெய்ய, மத்திய அரசு ஜெனரேட்டிவ் ஏஐ (Generative AI) உள்ளிட்ட முக்கிய தொழில்நுட்பங்களுக்கான நிதியுதவிகளை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. இந்தியாவில் பல நிறுவனங்கள் AI லாங்குவேஜ் மாடல்களை (Language Models) உருவாக்கி வருகின்றன, ஆனால் அவை பெரும்பாலும் ஆய்வு நிலை (Research Stage) மூன்றிலேயே சிக்கிக்கொண்டிருக்கின்றன. இந்த மாடல்கள் செயல்பாட்டிற்கு வர முடியாத முக்கிய காரணமாக, பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆதரவின்மை மற்றும் போதுமான முதலீடு இல்லாமை காரணமாக கூறப்படுகிறது.
மேலும், இந்தியாவிற்கு சொந்தமாக கூகுள், பேஸ்புக் போன்ற மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களும், செயலிகளும் இல்லாதது கூட இந்த வளர்ச்சிக்கு தடையாக இருக்கலாம் என சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. சீனாவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மேற்கொள்ள பாதுகாக்கப்பட்ட சந்தை (Protected Market) இருக்கிறது, ஆனால் இந்தியாவில் இது இல்லை என்பதும் முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், இந்தியாவில் AI வளர்ச்சியை ஊக்குவிக்க, அரசு மற்றும் தனியார் முதலீட்டாளர்கள் இணைந்து பெரும் தொழில்நுட்ப நிறுவனங்களை உருவாக்குவதற்கும், AI ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு தேவையான நிதி, பௌதிக வசதிகள், மாறும் கொள்கைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதும் முக்கியமானதாக உள்ளது என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.