Samsung Unveils Next Gen Gauss 2 AI - உலகளாவிய அளவில் சிறந்து விளங்கி வரும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பங்களுக்கு போட்டியாக Samsung அறிமுகப்படுத்தி இருக்கும் புதிய AI குறித்து இங்கு பார்க்கலாம்.
Samsung Unveils Next Gen Gauss 2 AI - பொதுவாக உலகளாவிய அளவில் தற்போது செயற்கை நுண்ணறிவு டூல்களை பயன்படுத்துபவர்கள் அதிகரித்து வருகின்றனர், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் AI Chatpot களை பயன்படுத்தி வருகின்றனர், வேலை ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பெரிதும் பயனாக இருப்பதால் செயற்கை நுண்ணறிவு உலகில் ஒரு குறிப்பிடத்தக்க இடத்தை ஆட்கொண்டு இருக்கிறது என்றே சொல்லலாம்.
சர்வதேச அளவில் கிட்டதட்ட 300 மில்லியன் பயனாளர்கள் தற்போது செயற்கை நுண்ணறிவு டூல்களை பயன்படுத்தி வருகின்றனர், அதில் தொழில் ரீதியாக 77% பயனாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர், சேட் ரீதியாக 24% பயனாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர், கல்வி ரீதியாக 11% பயனாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர், மொபைல் சாதனங்களில் 44% பயனாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த AI மார்க்கெட்டை புரிந்து கொண்டு Saumsung நிறுவனமும் தற்போது Most Advanced 'Gauss 2' என்ற செயற்கை நுண்ணறிவு திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது, உலகளாவிய அளவில் செயல்பட இருக்கும் இந்த Gauss 2 மற்ற AI களை விட சற்றே கொஞ்சம் சிறப்பானது என Samsung தரப்பு கூறுகிறது, தரவுகளை ஆராய்ந்து பதிலளிக்கும் அம்சங்கள் இதில் இருக்கும் என கூறப்படுகிறது.
மற்ற AI களை விட Samsung நிறுவனத்தின் Gauss 2 கிட்டதட்ட 1.5 மடங்கு வேகமாக செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறதாம், ஒரு மல்டிமாடல் செய்ற்கை நுண்ணறிவு தளமாகவும், கிட்டதட்ட 16 மொழிகளில் பயன்படுத்தும் வகையிலும், அதீத செயல்திறன் கொண்டதாகவும் Gauss 2 இருக்கும் என Samsung அறிவித்து இருக்கிறது, நிச்சயம் சந்தைகளில் ChatGPT, Gemini க்கு போட்டியாக இருக்கும் எனவும் சாம்சங் அறிவித்து இருக்கிறது.