Redmi A4 5G Release Date And Specifications - அசத்தலான தரவரைவுகளுடன் வெகுவிரைவில் வெளியாக இருக்கும் Redmi A4 5G குறித்து இந்த தொகுப்பில் முழுமையாக பார்க்கலாம்.
Redmi A4 5G Release Date And Specifications - என்ன தான் ஹை ரேஞ்ச் மாடல் மொபைல் வர்த்தகத்தை ஆப்பிள் நிறுவனமும், சாம்சங் நிறுவனமும் ஆட் கொண்டு இருந்தாலும், ஸ்டார்ட்டிங் மற்றும் மிட் ரேஞ்ச் மாடல் மொபைல் வர்த்தகத்தை Redmi கையில் வைத்து இருக்கிறது என்று சொல்லலாம், கிட்டதட்ட 11 வருடங்களாக இந்திய சந்தையில் அசைக்க முடியாத சக்தியாக இருந்து வருகிறது Redmi. பட்ஜெட் போன்களில் பெஸ்ட் போன்களை தருவதில் வல்லது Redmi.
தற்போது முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட Redmi A4 5G யின் இரண்டு வேரியண்ட்களை இந்தியாவில் வெளியிட்டு இருக்கிறது, இரண்டுமே பத்தாயிரத்திற்கும் கீழ் தான் விலை எனவும் சொல்லப்படுகிறது, பொதுவாகவே Redmi யின் நோக்கம் என்பது எளிய மக்களிடம் எளிய விலையில் மொபைலை கொண்டு சேர்ப்பது தான், அதை தான் தொடர்ந்து செய்து கொண்டும் வருகிறது.
Redmi A4 5G Specifications
மெமோரி: 4 GB RAM | 64GB/128GB ROM
ஸ்க்ரீன்: 6.88 inch + 120HZ Refresh Rate
இயங்குதளம்: Android 14
ரிசொல்யூசன்: 1080 x 2400 Pixels
கேமரா: 50MP Dual Camera | 5MP Front Camera
பேட்டரி: 5160 mAh Battery + 33W Wired Charger
பிராசசர்: Qualcom Snapdragon 4, 2 Chip
விலை: 64GB Variant 8,499 Rs | 128GB Variant 9,499 RS
கிடைக்கும் தளம்: Redmi,Xiomi And Amazon, ரிலீஸ் தேதி நவம்பர் 27
" பத்தாயிரத்துக்குள்ள பக்காவா ஒரு மொபைல் வாங்கனும்னு நினைக்கிறவங்க கண்டிப்பா இந்த Redmi A4 வாங்கலாம் "