Realme 14x 5G - பிரபல சீன மொபைல் நிறுவனமான OPPO வில் இருந்து பிரிந்து அதன் துணை நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்டது தான் Realme, ஆனால் ஆரம்பித்த சிறிது காலத்திலேயே தனது தனித்துவத்தால், தனி பிராண்டாக மாறி, தனி நிறுவனமாகவும் சர்வதேச அளவில் விரிவாக்கம் செய்யப்பட்டது, நுகர்வோர்களுக்கு ஏற்ற விலையில் பல அட்டகாசமான தனித்துவங்களையும் Realme நிறுவனம் புகுத்தி வருகிறது.
இந்த நிலையில் Realme நிறுவனம் வெளியிட்டு இருக்கும் Realme 14X 5G பற்றி பார்க்கலாம், குறிப்பாக இந்தியாவில் இது இரண்டு வேரியண்ட்களில் வெளியாகி இருக்கிறது, இரண்டு வேரியண்ட்களிலும் மற்ற தர வரைவுகள் எல்லாம் ஒன்று தான், ஆனால் RAM மற்றும் ROM யில் மட்டும் வித்தியாசங்கள் இருக்கும், அதை பொறுத்து விலையிலும் சற்று வித்தியாசம் இருக்கும்.
Realme 14X 5G Specifications
மெமோரி: 6GB RAM + 128GB ROM | 8GB RAM + 128GB ROM
ஸ்க்ரீன்: 6.67 inch + 120Hz Refresh Rate + HD+
இயங்குதளம்: Android 14
ரிசொல்யூசன்: 1604 x 720 Pixels
கேமரா: 50MP Back Camera | 8MP Front Camera
பேட்டரி: 6000 mAh Battery + 45W Fast Charging Support
பிராசசர்: Mediatek Dimensity 6300
GPU: ARM G57 MC2
விலை: 6GB RAM + 128GB ROM - 14,999 RS | 8GB RAM + 128GB ROM - 15,999 RS
கிடைக்கும் தளம்: Flipkart, Realme Official
" பதினைஞ்சாயிரத்துல பக்காவா ஒரு மொபைல் வாங்கனும்னு நினைக்கிறவங்க கண்டிப்பா இந்த மொபைல்க்கு போகலாம் "