• India
```

தென்கொரியா விமான விபத்துக்கு காரணம் என்ன தெரியுமா? விசாரனையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்..

Real Reason Behind South Korea Plane Crash

By Dhiviyaraj

Published on:  2025-01-30 16:36:18  |    7

தென்கொரியாவைச் சேர்ந்த ‘ஜேஜு ஏர்’ நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 737-800 ரக பயணிகள் விமானம், கடந்த ஆண்டு டிசம்பர் 19 அன்று தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது.

தென்கொரியாவைச் சேர்ந்த ‘ஜேஜு ஏர்’ நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 737-800 ரக பயணிகள் விமானம், கடந்த ஆண்டு டிசம்பர் 19 அன்று தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது. 175 பயணிகள் மற்றும் 6 விமான பணியாளர்கள் உள்பட 181 பேர் இருந்த நிலையில், விமான பணியாளர்களில் இருவர் மட்டுமே உயிர் தப்பினர். தாய்லாந்திலிருந்து வந்த இந்த விமானம் தரையிறங்கும்போது முன் சக்கரம் செயலிழந்தது முதற்கட்ட தகவல்களில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் புதிய ஆய்வில், விமானம் விபத்துக்குள்ளாவதற்கு பறவைகள் காரணமாக இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. 


விபத்துக்குள்ளான விமானத்தின் இரண்டு என்ஜின்களிலும் பறவையின் சிறகுகள் மற்றும் ரத்தக்கறைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவே உறுதியான காரணம் என்று உறுதிப்படுத்தப்படவில்லை. ஆய்வில், இது வெளிநாட்டிலிருந்து வரும் வாத்து போன்ற ஒரு பறவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.