இன்றைய டிஜிட்டல் உலகில், ஸ்மார்ட்போன்கள் ஒரு அத்தியாவசிய சாதனமாக மாறிவிட்டன. இன்று பெரும்பாலானவர்கள் மொபைல் போன்களை அழைப்புகள் மற்றும் பொழுதுபோக்கு மட்டுமல்லாமல், முக்கிய தரவுகளை சேமிக்கவும் பயன்படுத்துகிறார்கள்.
இன்றைய டிஜிட்டல் உலகில், ஸ்மார்ட்போன்கள் ஒரு அத்தியாவசிய சாதனமாக மாறிவிட்டன. இன்று பெரும்பாலானவர்கள் மொபைல் போன்களை அழைப்புகள் மற்றும் பொழுதுபோக்கு மட்டுமல்லாமல், முக்கிய தரவுகளை சேமிக்கவும் பயன்படுத்துகிறார்கள். ஆனால், அதிக அளவில் தரவுகளை சேமிக்கும்போது Storage Full பிரச்சனை ஏற்படும். இதைத் தவிர்க்க சில எளிய வழிகளை இங்கே பார்க்கலாம்.
கிளவுட் ஸ்டோரேஜ் பயன்படுத்து:
அனைத்து ஸ்மார்ட்போன் பயனர்களுக்கும் Google Account உள்ளது. கூகுள் கணக்கில் 15ஜிபி வரை தரவை இலவசமாக சேமிக்கலாம். இது போனில் சேமிப்பிடம் நிரம்பாமல் பாதுகாக்க உதவும். கூடுதலாக, Google Photos, OneDrive அல்லது Dropbox போன்ற Cloud Storage சேவைகளை பயன்படுத்தி படங்கள் மற்றும் வீடியோக்களை சேமிக்கலாம்.
Cache மற்றும் Cookies நீக்கவும்:
மொபைல் போனில் cache மற்றும் cookies அதிகமாகச் சேரும் போது, ஸ்டோரேஜ் விரைவில் நிரம்பிவிடும். இது பேட்டரி ஆயுளையும் பாதிக்கக்கூடும். Clear Cache சென்று தேவையற்ற cache மற்றும் temporary files நீக்கலாம். இதனால் போன் வேகமாகவும், ஸ்டோரேஜ் சிறப்பாகவும் செயல்படும்.
இந்த எளிய முறைகளை பின்பற்றுவதன் மூலம், மொபைல் ஸ்டோரேஜை சுலபமாக நிர்வகிக்க முடியும் மற்றும் போன் வேகமாகவும் செயல்படவும் செய்யலாம்.